வயிற்று எரிச்சல், வயிற்றுப் புண்! - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

17 ஜூன், 2011

வயிற்று எரிச்சல், வயிற்றுப் புண்!


பசி எடுத்தாலோ அல்லது உணவு உண்ட பிறகோ வயிற்றில் ஒரு வித எரிச்சல் ஏற்படும்இதைத்தான் வயிற்று எரிச்சல் என்று செல்கிறார்கள்.
வயிற்றில் புண் இருப்பதற்கான அறி குறியாகவும் இது இருக்கும்நேரம் தவறி உண்பதாலும்தொடர்ந்து அதிகக் காரமான உணவுகளை உண்பதாலும் வயிற்றுப் புண் வரக்கூடும்.
மேலும்வயிற்றில் உள்ள இரைப்பைமுன் சிறுகுடல்சிறுகுடல்கணையம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் ஏதேனும் புண் அல்லது அழற்சி இருந்தால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.முக்கியமாக இரைப்பையில் தோன்றும் அமில மிகைப்பு நோயில் இந்த அறிகுறி அடிக்கடி ஏற்படும்.இது தவிர இரைப்பை அழற்சிஇரைப்பை புண்முன் சிறுகுடல் புண்இரைப்பையும் உணவுக் குழலும் இணையுமிடத்தில் ஏற்படும் புண் போன்றவை வயிற்றில் ஏற்படும் எரிச்சலுக்குக் காரணங்களாக இருக்கும்.
மேலும் அல்சர் வருவதற்கு முக்கியக் காரணம் கார உணவுநேரந்தவறிய உணவுஅதீத உணவுமசாலா நிறைந்த உணவுஅசைவ உணவுஇதைத் தவிர அடிக்கடி சாப்பிடப்படும் வலி நிவாரண மாத்திரைகளும் அல்சரை உருவாக்கலாம்.
பல்வேறு காரணங்களினால் தொடர்ந்து வாந்தி எடுப்பவர்களுக்கும் வயிற்றுப் புண் ஏற்படலாம்.
புகைப்படிப்பதுமது அருந்துவது போன்றப் பழக்க வழக்கங்களினாலும் வயிற்றுப் புண் வருகிறது.
அதிகமான பதற்றம்கோபம் போன்றவற்றாலும் நமது உடலில் வயிற்று எரிச்சல் ஏற்படுகிறது.
வாயில் எப்போது பார்த்தாலும் சுயிங்கம் போட்டு மென்று கொண்டிருப்பவர்களுக்கு இந்த அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் வர அதிக வாய்ப்புகள் உண்டு.
ஆண்டுக் கணக்கில் சுயிங்கம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாயில் புற்று நோய் கூட வரலாம்.
சிலர் புகைப்பதை விடுவதற்காக சுயிங்கம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள்அதுவும் தவறு.
தெடர்ந்து சுயிங்கம் சாப்பிடுவதை தவிர்த்தல் நலம்.வயிற்றுப் புண் வராமல் இருக்க தினமும் மூன்று வேளை உணவையும் குறிப் பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
காரமான உணவுப் பொருட்களை தவிர்த்துஉடலுக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.
சுயிங்கம்புகைப்பழக்கம்மது அருந்துவது போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
வயிறு புடைக்க உண்பதை விட பசிக்கேற்ப உண்பதே சிறந்தது.
அடிக்கடி உண்ணாமல் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உணவு உண்பதும் அவசியம்.காலை மற்றும் இரவு நேரத்தில் தவறாமல் உணவு உண்பது அவசியம்.
ஏனெனில் இரவுநேர உணவுக்கும்காலை உணவுக்கும் அதிக நேர இடைவெளி இருப்பதால் இவற்றை தவிர்ப்பது உடலுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
போதுமான அளவிற்கு தண்ணீர் பருகுவதும் வயிற்றுக்கு ஏற்றது.
தண்ணீர் என்றால் அது சுத்தமானதாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியம்.
ஏனெனில் தண்ணீர் மூலமாகத்தான் பல நேய்கள் நம்மைத் தாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. INTERNET

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot