உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

LightBlog

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

21 ஜனவரி, 2023

ஜனாஸா வீடு – சில அவதானங்களும் இஸ்லாத்தின் வழிகாட்டல்களும்

ஜனவரி 21, 2023 0

 


இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டும் ஒரு மார்க்கமாகும். அந்தவகையில் நம்மில் ஒருவர் இறந்த பின்னரும் அவருக்குச் செய்ய வேண்டிய சில கடமைகளை வலியுறுத்தியுள்ளது. அதேபோல், அவரது குடும்பத்திற்கும் நாம் சில கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை சுருக்கமாக இக்கட்டுரை ஆராய்கிறது.

கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More

வலீமாவும் (விருந்து) சில சட்டங்களும்

ஜனவரி 21, 2023 0

 


 முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ராக்கா- சவூதி அரேபியா) –

வலீமா என்றால் என்ன?
வலீமா என்றால் விருந்து என்பது பொருள். வலீமதுல் உர்ஸ் என்றால் திருமண விருந்து என்று பொருள். திருமண விருந்தை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே திரமணத்திற்கென விருந்தளிப்பது வரவேற்கத்தக்கதாகும்.

யார் விருந்தளிக்க வேண்டும்?
பெண்ணிற்குரிய உணவு ஆடை செலவு போன்றவை கணவனது கடமை என்பதால் இதற்கு பொறுப்பானவர் ஆண் தரப்பாரே. நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர் அப்துர்ரஹ்மான் (ரழி) அவர்களிடம் ‘ஒர் ஆட்டைக்கொண்டேனும் வலீமாக்கொடுங்கள்’ (புகாரி 1943) என்று கூறியுள்ளார்கள்.

கணவனுக்கு பகரமாக பெண் வீட்டார் விருந்தளிக்கலாமா?

கணவனுக்கு பகரமாக யாரும் விருந்தளிக்கலாம் அதற்கு எவ்விதத் தடையும் மார்க்கத்தில் இல்லை

عَنْ سَهْلٍ، قَالَ لَمَّا عَرَّسَ أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ دَعَا النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَصْحَابَهُ، فَمَا صَنَعَ لَهُمْ طَعَامًا وَلاَ قَرَّبَهُ إِلَيْهِمْ إِلاَّ امْرَأَتُهُ أُمُّ أُسَيْدٍ، بَلَّتْ تَمَرَاتٍ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ مِنَ اللَّيْلِ، فَلَمَّا فَرَغَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الطَّعَامِ أَمَاثَتْهُ لَهُ فَسَقَتْهُ، تُتْحِفُهُ بِذَلِكَ

صحيح البخاري5182

ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்-ஸாஇதீ (ரழி) கூறினார், அபூ உசைத் அஸ்-ஸாஇதீ (ரழி) (தம்) மணவிருந்தின்போது நபி(ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக உணவு படைத்ததும் பரிமாறியதும் அபூ உசைத்(ரலி) அவர்களின் துணைவியார் உம்மு உசைத் (ரழி) அவர்களே. உம்மு உசைத் (ரலி) (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்களுக்காக உம்மு உசைத் (ரழி) அந்தப் பேரீச்சங்கனிகளை(த் தம் கரத்தால்) பிழிந்து அன்பளிப்பாக வழங்கினார்கள்

கணவன் ஒரு விருந்தும் பெண் வீட்டார் ஒரு விருந்தும் கொடுக்கலாமா?

நபித்தோழர்கள் வாழ்வில் இவ்வாறு எந்த நிகழ்வும் இல்லாதால் இதனை நாம் தவிர்க்க வேண்டும். வீண் விரயாமாக்கப்படும் இப்பணத்தை எழை எளியவர்களுக்கு உணவழித்து அல்லாஹ்-வின் கூலியை எதிர்பர்ப்பது இதை விடச்சிறந்நது.

கணவன் வீட்டிற்க்கு மனைவியை அழைத்துச் செல்வது தான் இஸ்லாமியத் திருமணமா?

இது இஸ்லாமியத் திருமணம் பற்றிய அறிவில்லாதவர்களின் கண்டுபிடிப்பு. அல்-குர்ஆனிலோ ஸுன்னாவிலோ இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. இதற்கு மாற்றமாக நபியவர்களுக்கும் ஸைனப் (ரழி) அவர்களுக்கும் திருமணம் நடந்தபோது நபியவர்களே ஸைனப் (ரழி) வீட்டிற்குச் சென்றுள்ளார்கள் (முஸ்லிம் 1425)

இது விருந்து யார் வீட்டில் வைப்பது என்பதைப்பற்றிய விளக்கமே தவிர சீதன வீடு பற்றியதல்ல. சீதன வீடு ஒரு பகற்கொள்ளை என்பதில் எந்த ஐயமும் இல்லை

திருமண விருந்து எப்போது கொடுக்கப்படவேண்டும்?

கணவன், மனைவி உறவிற்குப் பிறகுதான் வலீமா என ஸுன்னாவில் எந்த நிபந்தனையும் கிடையாது. திருமண உடன்படிக்கை நடந்தது முதல் திருமண விருந்தளிக்கலாம்.

திருமண உடன்படிக்கையின் போது பயான் செய்வது நபிவழியா?

எந்த ஒரு நல்ல காரியமாயினும் (خطبة الحاجة) குத்பதுல் ஹாஜா-வைக் கொண்டு ஆரம்பிப்பதே நபி வழி. ஆகையால் இதை கொண்டு العقد – – அக்-தை நடத்துவதே சிறந்ததாகும். ஆனால் அதன் பின்னால் உரை நிகழ்த்துவது நபி வழியல்ல. நபியவர்கள் நடத்தி வைத்த எந்தத் திருமணத்திலும் எந்த உரையும் நிகழ்த்தியதில்லை.

العقد – – அக்தை பள்ளியில் நடத்துவது சிறந்ததா?

العقد அக்-தை விரும்பிய இடத்தில் நடத்தலாம். பள்ளியில் தான் நடத்த வேண்டும் என்பதாக வரும் திர்மிதீ (1088) ஹதீஸ் பலஹீனமானதாகும்.

திருமணம் முடிந்த பிறகு தம்பதியர்களுக்காக எவ்வாறு பிரார்த்திக்க வேண்டும்?

Read More

18 ஜனவரி, 2023

முத்தான துஆக்கள்

ஜனவரி 18, 2023 0

 السلام عليكم ورحمه الله وبركاته.

நன்மைக்கு நினைவூட்டல்.

தூங்கி எழுந்தவுடன் ஓத வேண்டிய துஆ

Read More

மனுஸ்மிருதியை இந்துக்கள் படிச்சுட்டா இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இருக்காது: திருமாவளவன்!

ஜனவரி 18, 2023 0

 

ன்றைக்கு நாம் சந்திக்கின்ற அனைத்து சிக்கல்களுக்கும் முரண்பாடுகளுக்கும் சாதிய பாகுபாடுகளுக்கும் பாலின பாகுபாடுகளுக்கும் அடிப்படை கருத்து மனுஸ்மிருதி தான். மனுஸ்மிருதி இன்று புத்தகமாக மக்களிடையே அறிமுகப் படுத்துவதற்கான காரணம் மனுஸ்மிருதி அரசியல் கொள்கையாக கொண்டிருக்கின்ற ஆர்எஸ்எஸ் இயக்கம், மக்கள் இயக்கம் போல் காண்பிக்க முயற்சித்து வருகிறது.

ஆர் எஸ் எஸ் இயக்கம் பிற கட்சிகளைப் போல சராசரியான மக்கள் இயக்கம் இல்லை; ஜனநாயக இயக்கம் இல்லை; கலாச்சார இயக்கமும் இல்லை.. மதவாத அரசியலை வெறுப்பு அரசியலை, பாகுபாடு அரசியலை கொண்டு இருக்கிறது. அது ஒரு முறைக்கு இருமுறை தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம். காந்தியடிகளை கொன்ற இயக்கம், காமராஜரை கொல்ல முயன்ற இயக்கம், பாபர் மசூதியை இடித்த இயக்கம், குஜராத் படுகொலையை நடத்திய இயக்கம், தொடர்ந்து லவ் ஜிகாத் என்றும் கர்வாசி என்றும் holy Cow பசு புனிதம் என்றும் பல்வேறு பெயர்களில் முஸ்லிம் வெறுப்பையும், கிறிஸ்தவ வெறுப்பையும், இந்த மண்ணில் விதைக்கிற இயக்கம்.

இந்தியர்களை இந்துக்கள் என்றும் இந்துக்கள் அல்லாதவர்கள் என்றும் பிளவுபடுத்துகிற இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இந்துக்களை மேல் சாதி கீழ் சாதி என்று பிளவு படுத்தி அவர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற இயக்கம். சமூக ஒற்றுமைக்கு எதிரான இயக்கம். ஆகையால் தான் இந்த இயக்கம் தமிழ்நாட்டில் வேறு ஒரு ஆபத்தானது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். பாரதிய ஜனதா கட்சி என்றாலும் அது ஒரு அரசியல் இயக்கமாக இருக்கிற காரணத்தினால் வெளிப்படையாக இந்த பாகுபாடுகளை வெறுப்பு அரசியலை பேசத் தயங்குகிற இயக்கம். ஆகவே பாஜக ஒரு அரசியல் இயக்கம் என்கிற பெயரில் பேரணிகளை நடத்துவதில் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை.. ஆர் எஸ் எஸ் அரசியல் பிரிவாக இருக்கிற பாஜக இருக்கும்போது பிஜேபி சார்பில் பேரணி நடத்தாமல் ஆர் எஸ் எஸ் சார்பாக பேரணி நடத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது?

ஆர் எஸ் எஸ், பாஜக வேறு வேறு அல்ல. இந்திய மண்ணில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கடந்த முறை இவர்கள் பேரணி நடத்த முயற்சித்த போது 80க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று கூடி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ஆர்எஸ்எஸ் பின்வாங்கிக் கொண்டது. மனுஸ்மிருதி முலம் இந்து சமூகத்தினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையாக மேற்கொண்டு இருக்கிறோம். இது ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான நடவடிக்கையே தவிர இந்து சமூகத்தினருக்கு எதிரான நடவடிக்கை அல்ல. இந்துக்களின் நலன்களை பாதுகாப்பதற்காகத்தான் இந்துக்களின் பாதுகாப்பை முன்னுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு வெகுமக்கள் மத்தியில் இன்றைக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றது

மனுஸ்மிருதி படிக்கத் தொடங்கினால் விழிப்புணர்வு பெற்றால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஆர்எஸ்எஸுக்கு இடம் இருக்காது. காவல்துறை தான் திருநெல்வேலியில் அனுமதி இல்லை; இதை வழங்கக் கூடாது என்று தடுத்திருக்கிறார்கள். வேறு யாரும் தடுக்கவில்லை. அதை மீறி தோழர்கள் ஆங்காங்கே அமைதியான முறையில் வழங்குகிறோம். இது ஆர்ப்பாட்டம் இல்லை; பேரணி இல்லை; நாங்கள் துண்டறிக்கை விநியோகம் செய்வது போல இதை விநியோகம் செய்கிறோம். எங்களை நீங்கள் தடுக்க கூடாது என்று சொல்லி ஒரு சிலருக்கு அந்த புத்தகங்களை வழங்கி இருக்கிறார்கள். அதையும் தாண்டி காவல்துறை அவர்களை சில மணி நேரம் பிடித்து மண்டபத்தில் அடைத்து வைத்திருந்து விடுவித்து இருக்கிறார்கள். இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

இன்று நவம்பர் 6, 2022 அன்று, திரு. தொல். திருமாவளவன் வெளியிட்ட மனு ஸ்மிருதி நூலிலிருந்து சில பகுதிகளை வாசிக்க க்ளிக் செய்க:

http://www.satyamargam.com/wp-content/uploads/2022/11/Manu-Smiruthi.pdf

Read More

Post Top Ad

Your Ad Spot