பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தப்லீக் ஜமாஅத் என்பது என்ன?
தப்லீக் என்பது என்பதற்கு பொருள் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் நம்பிக்கையை வழுப்படுத்த உருவான சமுதாயம் என்பதாக பொருள் காணப்படுகிறது! பெரும்பாலும் இந்த அமைப்பினர் வெள்ளை நிற ஜிப்பாவும் தலையில் தொப்பி யுடனும் காணப்படுவர். தங்கள் போதனைகளை மக்களிடத்தில் எத்திவைப்பதற்காக வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்ததும் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு மாதத்தில் 3 நாட்கள் அல்லது நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் என்று குடும்பத்தை மறந்து பயணம் மேற்கொள்வார்கள்!
தப்லீக் ஜமாஅத்தில் மூளைச் சலவை செய்யப்படுகிறது!
பயணம் முடியும் வரை வீட்டிற்கு திரும்பமாட்டார்கள் ஒருவேளை பயணத்தின் இடையில் சொந்த குடும்பத்தார், நெருங்கிய சொந்தபந்தங்கள் யாராவது மரணித்துவிட்ட செய்தி கிடைத்தால் அந்த குறிப்பி்ட்ட நாள் மட்டும் சம்பந்தப்பட்ட நபர் மட்டும் பயணத்தை ரத்து செய்துவிட்டு சொந்த குடும்பத்தாராக இருந்தாலும் எளவு விழுந்த வீட்டின் வாசற்படிகளை கூட மிதிக்காமல் வீட்டிற்கு வெளியே நின்று ஜனாஸாவை பார்த்தவிட்டு, நல்லடக்கம் செய்யும்வரை அமர்ந்துவிட்டு மீண்டும் தங்கள் பயணத்திற்கு சென்றுவிடுவார்கள். சொந்த வீட்டில்கூட சாப்பிட மாட்டார்கள் என்று கூட கேள்விப்பட்டதுண்டு! இப்படித்தான் இந்த ஜமாஅத்தில் பங்கேற்கும் இளம் வாலிபர்களை மூளைச் சலவை செய்து அவர்களை குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்துகிறார்கள்!
தப்லீக் ஜமாஅத்தினர் நடவடிக்கைகள்
குடும்பத்தில் எளவு விழுந்தால் கூட தங்கள் பயணத்தை பாதியில் ரத்து செய்யத் தயங்கும் இந்த சகோதரர்கள் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழும் அதைப் பற்றி இங்கு காண்போம்.
மக்களுக்கு போதனைகளை எத்திவைப்பதற்காக ஒரு குழுவாக பயணிப்பார்கள், தங்களுக்கு கண்களில் ஒரு சிறிய ஊர் அல்லது கிராமம் தென்பட்டவுடன் அங்குள்ள மசூதியில் முதலில் தொழுவார்கள் பின்னர் நைசாக அந்த மசூதிக்கு வரும் தொழுகை யாளிகளின் வசி்ப்பிடங்களை நோட்டமிடுவார்கள். தெருவில் செல்வச்செழிப்பும், வசதியும்படைத்த முஸ்லிம் யார் என்பதை கேள்விப்பட்டு அவரிடம் தங்கள் பிரச்சாரத்தை எத்திவைப்பார்கள். அந்த செல்வந்தனும் தங்களை நாடிவந்த இந்த பிரச்சாரகர்களிடம் தன் செல்வச் செழிப்பை காட்டி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தெருவில் உள்ளவர்களுக்கு மத்தில் தன் செல்வ பெருமையாக காட்டுவதற்காக இந்த ஜமாஅத்தாரை கவுரவித்து விருந்து கொடுப்பார்!
பின்னர் முஸ்லிம்கள் வாழும் தெருக்களை அவர் அடையாளம் காட்டி தன்னுடைய சகாக்களை துணைக்கு அணுப்புவார். பின்னர் இந்த தப்லீக் ஜமாஅத்தினர் தங்களுக்குள் 4-5 குழுக்களாக பிரிந்து விடுவார்கள்.
முஸ்லிம்களின் தெருக்களில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளின் கதவுகளை தைரியமாக தட்டி பெண்களிடம் தப்லீக் ஜமாஅத் வந்துள்ளது உங்கள் வீடுகளில் ஆண்கள் இருந்தால் அணுப்புங்கள் நாங்கள் பிரச்சாரம் செய்ய வந்துள்ளோம் என்று அழைப்பு விடுப்பார்கள் அப்படி ஆண்கள் வெளியே வரவில்லையெனில் தங்களுடன் வந்த அந்த ஊர் செல்வந்தனின் சகாக்களை அனுப்பி வலுக்கட்டாயமாக (ஜபர்தஸ்தியாக) ஆண்களை அழைப்பார்கள். சில ஆண்கள் செல்வந்தனின் சகாக்களை பார்த்து வெட்கப்பட்ட வந்துவிடுவார்கள் மற்றும் சிலரோ வீட்டில் ஆண்கள் இல்லை என்று குடும்ப பெண்களின் மூலமாக பொய் சொல்லிவிடுவார்கள்!
தப்லீக் ஜமாஅத்தார் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள்?
மக்களை வலுக்கட்டாயமாக வரவழைத்து தெருவின் முச்சந்தியில் நின்று அவரிடம் தொழுகை பற்றி விரிவான போதனை நடைபெறும். ஆனால் இந்த தொழுகை பற்றிய போதனையில் இவர்கள் குர்ஆன் ஹதீஸ்களை ஆரம்பத்தில் ரத்தின சுருக்கமாக பயன்படுத்துவார்கள் பின்னர் குர்ஆன் ஹதீஸ்களை ஓரங்கட்டிவிட்டு தங்களுடைய அமல்களின் சிறப்பு என்ற தெய்வீக புத்தகத்தின் வசனங்களை அள்ளி வீசுவார்கள் இதனால் அந்த போதனைகளை கேட்கும் முஸ்லிம் சகோதரன் பயந்துவிடுவான் அந்த அளவுக்கு கப்ருவேதனை பற்றிய மிரட்டல்கள் காணப்படும்! இதோ சில போதனைகள் பாரீர்!
ஒரு இமாம் இருந்தார் அவர் தினமும் நஃபில் தொழுகைகள் மட்டும் 300 ரக்காத்து தொழுவார். ஒருவர் கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு தினமும் தொழுதுக்கொண்டே இருப்பார், ஒரு பெரியவர் 70 வருடம் இடைவிடாது தொழுதுக் கொண்டே இருந்தார், மற்றொரு பெரியவர் 40 ஆண்டுகள் தூங்காமல் இருந்தார் என்று மூளைச் சலவை செய்வார்கள்
நீங்கள் ஒழுங்காக தொழவில்லையானால் கப்ருகளில் 60அடி நீளமான தேள் உங்கள் தலைக்கு மேல் நிற்கும், அதன் விஷகொடுக்கு இத்தனை அடி நீளமானதாக இருக்கும், அதன் விஷம் இப்படி அப்படி இருக்கும் அது கொட்டினால் வேதனை எப்படி இருக்கும் என்று மிரட்டுவார்கள். உடனே அதை கேட்பவன் திகில் அடைந்து கதிகலங்கி நிற்பான் உடனே எங்களுடன் தொழ வாருங்கள் என்று கூறி பரிகாரம் என்ற தொனியில் தங்கள் ஜமாஅத்தில் சேருங்கள் தொழுகையை தொடருவோம் என்று கூறுவார்க்ள அவனும் அவர்களின் மாய வலையில் விழுந்து விடுவான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக