...துஆ... - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

4 பிப்ரவரி, 2011

...துஆ...





எத்தனையோ திக்கற்றவர்கள் வானத்தின் பால் கையேந்தி “யா ரப்பு! யா ரப்பு!”என்று துஆ கேட்கின்றனர்.ஆனால் அவர்களின் உணவு,உடை,இருப்பு,அனைத்தும் ஹராம்.இந்நிலையில் கேட்கும் துஆ இறைவனால் அங்கீகரிக்கப்படாது என்பது மாநபியின் நல்வாக்காகும்.


”கூபா”நகரிலே மகான்களின் கூட்டம் ஒன்று இருந்தது.அவர்கள் துஆ கேட்டால் உடனே அங்கீகரிக்கப்பட்டுவிடும்.அந்நகரத்தில் அ
நீதி செய்யப்படும் அதிகாரி நியமிக்கப்பட்டால் உடனே இவர்கள் துஆ செய்வார்கள்.அத்துடன் அந்த அதிகாரியின் ஆக்ரமிப்பு அழிந்து போகும்.மழை வேண்டிக்கேட்டால் உடன் மழை பொழியும்,இவ்வாறாக கூபா நகரில் அந்த மகான் கூட்டம் மக்களுக்காக பிரார்த்தனை செய்து வந்தது.


கொடியோன் ஹஜ்ஜாஜ் அதிகாரியாக நியமிக்கப்பட்டதும்,அவன் ஒரு சூழ்ச்சி செய்தான்.அந்த மகான்கள் அனைவருக்கும் விருந்து அளித்தான்.அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் நான் இந்த மகான்களின் சாபக்கேட்டில்; இருந்து தப்பித்து விட்டேன்.”என்று ஹஜ்ஜாஜ் கூறினான்.காரணம் என்னவென்று விசாரித்ததில் “மகான்களின் வயிற்றில் ஹராமான உணவு சென்று விட்டது”என்று கூறினான்.

ஹராமான உணவு மகான்களின் வயிற்றினுள் சென்று விட்டபடியால் அவர்கள் கேட்கும் துஆ இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று ஹஜ்ஜாஜ் கொக்கரித்த்து அவனது மதியீனம் இன்றி வேறென்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot