அரபிப் பதத்தின் விளக்கம் - 2 - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

4 பிப்ரவரி, 2011

அரபிப் பதத்தின் விளக்கம் - 2


அரபிப் பதத்தின் விளக்கம் - 2


11.கலிமா - இதன் பொருள் சொல்,வார்த்தை,பேச்சு என்பதாகும்.இஸ்லாத்தின் அடிப்படை தத்துவங்களை கூறும் வசனங்களுக்கு கலிமா என்று கூறப்படுகிறது.'லாயிலாஹா இல்லல்லாஹ் -முஹம்மது ரசூலுல்லாஹ்(வணக்கத்துக்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும்இல்லை-முஹம்மது(ஸல்)அவர்கள் இறைவனின் தூதர்)எனும் இஸ்லாமின் மூலக்கொள்கையை இச்சொல் குறிக்கும்.


12.தயம்மும் - இச்சொல்லுக்கு நாடுதல் என்று பொருள்.உளு செய்வதற்கு நீர் கிடைக்காத பொழுது மண்ணைக்கொண்டு சுத்தி செய்து கொள்ள நாடுவதைக் குறிப்பிட இச்சொல் பயன் படுத்தப்படுகின்றது.'உளு' எனும் அங்கசுத்தி செய்ய நீர் கிடைக்காத சமயத்தில் சுத்தமான மண் உள்ள தரையில் கைகளைப் பதித்து முகம் ,கைகளில் தடவிக்கொள்வது.


13.தவாஃப் - புனித மக்காவில் உள்ள திருகஃபாவை ஏழுதடவை சுற்றி வருவதற்கு தவாஃப் என்று பெயர்.முஸ்லிம்கள் கஃபாவைத் தவிர வேறு எதனையும் சுற்றி வருதல் கூடாது.ஹஜ்ஜிலும்,உம்ராவிலும் இது முக்கிய வழிபாடாகும்.


14.துஆ - இதன் பொருள் இறைஞ்சுதல்,பிரார்தித்தல் என்று பெயர்.அழைப்பு என்பது சொற் பொருளாகும்.


15.நபி - நுபு எனும் மூலச்சொல்லில் இருந்து வந்த இதன் பொருள் உயர்த்தப்பட்டவர் என்பதாகும்.இறைவனிடமிருந்து செய்திகளை 'வஹீ' மூலம் எடுத்துக்கூறும் தூதர்களுக்கு கூறப்படுகின்றது.நபித்துவத்திற்கு 'நுபுவத்'என்று பெயர். எல்லா நபிமார்ளும் இறைவனால் அனுப்பப்பட்டவர்களே. மக்களுக்கு இறை செய்திகளை எடுத்துரைத்து அவர்களுக்கு நேர்வழிக்காட்டுவதற்காக மக்களில் இருந்தே இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே இறைத்தூதர்.


16.பக்கா - இது புனித மக்காவின் பழைய பெயராகும்.


17.மக்கா - இஸ்லாத்தின் புண்ணிய நகராமான இது சவூதி அரேபியாவில் உள்ள ஹிஜாஸ் மாநிலத்தில் செங்கடலில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ளது.இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் இறை ஆணைப்படி இங்கு புனித கஃபாவை நிர்மாணித்தார்கள்.இஸ்லாத்தில் இறுதித்தூதர் முஹம்மத்நபி(ஸல்) இப்புனித பூமியில் அவதரித்தார்கள்.


18.மகாமு இப்ராஹீம் -நபி இப்றாஹீ(அலை) அவர்கள் கஃபாவை நிர்மாணிக்கும் பொழுது ஒரு கல்லில் மீது நின்றுகொண்டிருந்தார்கள்.அதில் அவரது பாதங்கள் இரண்டும் பதிந்திருந்தன.இக்கல் இருந்த இடமே மகாமு இப்றாஹீம்.


19.மத்ரஸா - இதன் பொருள் கல்வி போதிக்கப்படும் இடம் என்பதாகும்.பொதுவாக மார்க்க கல்வி போதிக்கப்படும் கல்லூரிகளை மத்ரஸா என்று குறிப்பிடுவர்.


20.மதீனா - இதன் பொருள் பட்டணம்,நகரம் என்பதாகும்.இது சவூதி அரேபியாவில் உள்ள ஹிஜாஸ்மாநிலத்தில் புனித மக்காவிற்கு வடக்கே 320 மைல் தொலைவில் உள்ள இஸ்லத்தின்புண்ணிய நகரங்களுள் ஒன்று.இங்கேதான் அண்ணல் நபி(ஸல்) அவர்களுடைய,அவர்களது தோழர்களுடைய,இன்னும் பலருடைய அடக்கஸ்தலங்கள் உள்ளன.


21.மஸ்ஜித் - சுஜூத் என்னு சொல்லில் இருந்து பிறந்த இதன் பொருள் தொழுமிடம் என்பதாகும்.இந்தியாவில் முதன் முதல் கட்டப்பட்ட மஸ்ஜித் கி.பி 642 -ல் மாலிக் இப்னு தீனாரால்,கேரளா மாநிலத்திலுள்ள கொடுங்கலூரில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளி வாசலாகும்.ஐவேளைத்தொழுகைகள் நடத்தப்படும் பள்ளிவாசல்..உலகில் இறைவனை தொழுவதற்காக நிர்மாணிக்கப்பட்ட முதல் தொழுமிடம் புனித 'கஃபா'இஸ்லாமியர் எங்கெங்கு இருந்தார்களோ அங்கங்கு எல்லாம் தொழுமிடங்களை எழுப்பினார்கள்.


22.மஹர் - இஸ்லாமிய சட்டத்தின் படி மணமகன் தான் முடிக்கும் பெண்ணுக்கு கொடுக்கும் திருமணக்கட்டணத்திற்கு இப்பெயர் வழங்கப்படுகின்றது.இதைப்பற்றி அல்குர் ஆனில் "நீங்கள்திருமணம் செய்துகொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள்.அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் மனமார உங்களுக்கு விட்டுத்தந்தால் அதனை நீங்கள்தாரளமாக மகிழ்வுடன் புசியுங்கள்."(4:4)என்று இறைவன் கூறுகின்றான்.இதை முஸ்லிம் மணமகன்,மணமகளுக்கு கட்டாயம் செலுத்த வேண்டிய விவாக கட்டணம் என்றும் சொல்லலாம்.
இன்னும் வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot