முத்துக்கள் மும்மூன்று. - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

4 பிப்ரவரி, 2011

முத்துக்கள் மும்மூன்று.




1.அல்லாஹ்வின் தூதுவர்கள் மூவர்

1.மார்க்க யுத்தம் செய்பவர்
2.ஹஜ்ஜுக்கு செல்பவர்
3.உம்ரா செல்பவர்.

அ:அபுஹுரைரா(ரலி)
ஆ:நஸாயீ


2.அல்லாஹ்வின் பொறுப்பில் இருப்பவர் மூவர்

1.அல்லாஹ்வின் வழியில் போர் செய்பவர்
2பள்ளிவாசலுக்கு செல்பவர்
3.தன் வீட்டிற்கு அமைதி நாடி செலபவர்.

அ:அபு உமாமா
ஆ:அபூதாவூத்

3.மூவித நற்செயல்கள் எவரில் குடி உள்ளதோ அவர் மீது அல்லாஹ் தன் அடைக்கல ப்போர்வையை போர்த்தி அவரை சுவனபதியில் சேர்க்கின்றான்.

1.இயலாதோருக்கு உதவுதல்
2.பெற்றோர் மீது அன்பு கொள்ளுதல்
3.அடிமைக்கு உதவுதல்.

அ:ஜாபிர் (ரல்)
ஆ"முஸ்லிம்

4.அல்லாஹ் நேசம் கொள்ளும் மூவர்.

1.மறைவாக தானம் அளிப்பவர்
2நிறைவாக இறைமறை ஓதுபவர்
3.அஞ்சா நெஞ்சத்துடன் மார்க்கப்போர் புரிபவர்.

அ:அபுசர்
ஆ:திர்மிதி

5.அல்லாஹ் சினம் கொள்ளும் மூவர்
1.விபச்சாரம் செய்பவர்
2.பெருமைபாராட்டும் ஏழை
3.அநியாயம் செய்யும் செல்வந்தர்

அ:அபுசர்
ஆ:திர்மிதி

6.மனிதன் இறந்து விட்டாலும் முடிவுறாத மூன்று செயல்கள்

  1. நிலையான தர்மம் ... உதா: குளம் வெட்டுதல் , கிணறு வெட்டுதல் , நிழல தரும் , மற்றும் கனி தரும் மரம் நடுதல்(( ஊர் பொதுவாக உபயோகிக்க))
  2. நேர்மையான கற்று பிறருக்கும் கற்பித்த கல்வி.
  3. சாலிஹான பிள்ளைகள்.. (( தன் தாய் தந்தைக்காக துவா செய்யும் பிள்ளை))
அ:அலி(ரலி)
ஆ:திர்மிதி


7.மூன்றுவித மனிதருடன் மறுமையில் இறைவன் உரையாட மாட்டான்.

1.விபச்சாரம் புரிபவர்
2.பொய் கூறும் அதிகாரி
3.சக்தி இருந்தும் உழைக்காத குடும்பஸ்தன்
அ:அபூஹுரைரா

ஆமுஸ்லிம்,நசாயீ

8.மூன்றுவித மனிதர்களை இறைவன் மறுமையில் நோக்க மாட்டான்

1.பெற்றோருக்கு மாறு செய்பவன்
2.ஆண் ஆடை அணியும் பெண்
3.ரோஷம்,சுரணை அற்றவன்.

அ:இபுனு உமர்
ஆ:நஸாயீ

9.மூன்று வித மனிதர்கள் மறுமையில் நாயகத்தின் விரோதிகள்.
1.மோசம் செய்பவன்
2.சுதந்திரமுள்ள மனிதனை விற்று அதனை உண்பவன்.
3.வேலைக்குறிய கூலியை பணியாளுக்கு அளிக்காதவன்.

அ:முகீரா(ரலி)
ஆ:புகாரி

10.இறைவன் அறுவெறுப்படையும் மூவித செயல்கள்.

1.பயனற்ற பேச்சு பேசுதல்
2.பணத்தை வீண் விரயமாக்குதல்
3.அதிகமாக பொருட்களை கேட்குதல்

அ:முகீரா(ரலி)
ஆ:புகாரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot