துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா? - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

7 டிசம்பர், 2017

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா?


கேள்வி: இறந்தவரை அடக்கம் செய்தபின் அவருடைய வீட்டிற்கு வந்து ஒருவருக்கொருவர் முஸாஃபஹா செய்து ஸலாம் சொல்லிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வது இறந்தவருக்கு பயன்தருமா?
பாத்திமா.
பதில் : இறந்தவரை அடக்கம் செய்தபின் அவரது வீட்டிற்கு முன்னால் அணிவகுத்து நின்று ஒருவருக்கொருவர் முஸாஃபஹா செய்து கைகொடுத்துக் கொள்ளும் வழக்கம் சில முஸ்லிம் ஊர்களில் காணப்படுகிறது. ஜனாசா தொழுகையில் கலந்து கொள்ளாதவர்கள் கூட கட்டாயம் இதில் கலந்து கொள்வார்கள். இந்நிகழ்ச்சிக்கு வராதவர்கள் இறந்தவருக்கு மிகப்பெரும் எதிரி போல் சில ஊர்களில் கருதப்படுகின்றனர்.
ஒரு முஸ்லிம் சகோதரர் மரணித்துவிட்டால் அவருக்காக ஜனாசா தொழுகையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்வது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிற்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாக நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
صحيح البخاري رقم فتح الباري (2/ 71)
1240 – حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " حَقُّ المُسْلِمِ عَلَى المُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلاَمِ، وَعِيَادَةُ المَرِيضِ، وَاتِّبَاعُ الجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ العَاطِسِ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை: ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை நலம்விசாரிப்பது, ஜனாஸாவைப் பின் தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது, தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 1240
அடக்கம் செய்தபின் இறந்தவரின் வீட்டிற்கு முன்னால் அணிவகுத்து நின்று ஒருவருக்கொருவர் கைகொடுத்து ஸலாம் சொல்லிக் கொள்வதும். ஸலவாத் ஓதிக் கொள்வதும் நபியவர்கள் காட்டித்தராத பித்அத்தான அனாச்சாரங்களாகும்.
எனவே இதுபோன்ற காரியங்களில் நாம் பங்கெடுப்பது கூடாது. இதனால் இறந்தவருக்கு எந்தப் பயனும் ஏற்படாது.
صحيح البخاري
2697 – حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது (இறைவனால்) மறுக்கப்படும்!
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரீ 2697
صحيح مسلم
4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம்
سنن النسائي
1578 – أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ يَقُولُ: «مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவான அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : நஸயீ 1560
நானும் ஜனாசாவில் கலந்து கொண்டேன் என்று காட்டிக் கொள்வதற்காக இந்த வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இறந்தவரின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்து இருக்கும் போது மூன்று நாட்கள் அவர்கள் கவலைப்படுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கும் போது அவர்களைத் தேடிச் சென்று தொல்லைப்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது நல்லது.
இறந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி அறிந்திட ஜனாஸாவின் சட்டங்கள் என்ற நமது நூலைப் பார்வையிடவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot