இல்லறக் கல்வி என்பது மனித நலத்தையும், வளத்தையும் நல்ல நிலையில் நிர்வகிக்கும் ஒரு அற நிலையம் - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

31 மே, 2011

இல்லறக் கல்வி என்பது மனித நலத்தையும், வளத்தையும் நல்ல நிலையில் நிர்வகிக்கும் ஒரு அற நிலையம்



''தாய்க்கு பின் தாரம்'' என்பார்கள். தவறான கருத்தாக்கங்களால் தாய் இறந்த பின் தாயின் நிலையில் மனைவி என்பவள் இருப்பாள், என்றும் தாயை போல் தன்னையும் பாரமாரிப்பாள் அல்லது இயங்குவாள் என்பது ஒரு பொது நோக்கு கருத்தாக நிலைப்பெற்று விட்டது.
ஆனால் இந்த உலகிலே அற்புதமான அதிசயத்தக்க உறவு எது என்றால் தாயும் தாரமும்தான். இந்த இரு உறவுகள்தான் உணர்வுகளாளூம் உடலாலும் உதிரத்தாலும் மனிதனோடு பிணைக்கப்ட்டு வார்க்கப்பட்ட ஒரு உன்னதமான உறவாகும். ஒரு தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு அவர்களின் அவர்களின் திருமண பந்ததோடு நின்றுவிடுகிறது. ஒரு தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவு தாய் இறந்தவுடன் அவளோடு அந்த உறவும் மண்ணோடு புதைந்துவிடுகிறது. ஆனால் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள பந்தம் ஆயுள் காலம் முதல் தொடர்ந்து செல்கிறது.
திருமணமாகி சில காலங்களிலே பெரும் பிரச்சனைகளை சந்திக்கும் தம்பதிகள்தான் நிறைய உண்டு இன்றைய காலக்கட்டதில். காரணம் புரிந்துணர்வு என்பது சிறிதேனும் இல்லை என்பதே. கல்யானத்திற்கு முன் அழகாகத் தோன்றும் மனைவி கல்யானத்திற்கு பிறகு இராட்சசியாக தோற்றம் அளிக்க என்ன காரணம்? அன்பிலே குறை ஏற்படுவதுதான் காரணம். அந்த அன்பு மறைவதற்கு என்ன காரணம் மனதிலே ஏற்படும் இறுக்கம் தான்.
மனைவியை நல்ல நண்பாரகவும் உற்ற தோழியாகவும் பார்க்கும் பக்குவம் நமக்கு எப்பொழுது ஏற்படப் போகிறது? அழகிய இராட்சசி, அன்பான இராட்சசியாக மாறியிருந்தால் இருந்தால் நல்லதுதானே? அவர்களும் மலரினும் மென்மையானவர்கள்தானே. மனப்பக்கும் பெற்றால் ஊடல் கூடல் ஆகும் கூடல் இன்பமாகும். மனம் திறந்த புத்தகமாக கணவன் மனைவி மாறும் பொழுது நமக்குள் இருக்கும் இடைவெளி அகழும் அன்பு பெருக்கும். அன்பொழுக பேசுவதனால் உறவுகள் கூடுமே தவிர குறையாது. அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்? கணவன் மனைவியை வாழ்த்துவதை விட வேறு ஒரு இன்பமையமான நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை.]
இன்றைய இந்திய சமுதாயத்தில் வன்முறை கலாச்சாரம் ஒழுக்க சீர்கேடுகளூம் தலைவிரித்து ஆடுவதாக ஒரு சிலரின் குற்றச்சாட்டாக மாறி இருக்கிறது. எங்கும் குண்டர் கும்பல். சினிமா மோகம்., ஏழ்மை நிலை தரம் தாழ்ந்த பண்புக்கூறுகளின் கூடாரமாக இந்தியர்களின் வாழ்வியல் மாறிவருகிறது என்பது ஒரு பொது கருத்தாக இருக்கிறது. சமுகம் அரசியல் பொருளாதாரம் ஆன்மீக அறிவு சார்ந்த எந்த நிலையிலும் இந்தியர்களிள் வரம்புகள் ஒரு விளிம்பு நிலை இலக்கண பிரிவுக்குள் தொக்கி நிற்கிறது. சமுதாய இன்னல்கள் பல்கி பெருகி கொடும் செயல் எங்கும் பரந்துவிரிந்து நிற்கிறது. மனிதன் பெருமையை மனிதன் உணர்ந்த நடந்தால், மனதின் திறத்தை மதித்து உணர்ந்தால் பெரும்பாலான மனித நேயத்து சிக்கல்கள் தீர்ந்து உள்ளத்திலே அமைதியும் உலகிலே சமாதானமும் உருவாகும். நாட்டின் வளப்பத்தையும் சுபீட்சத்தையும் அமைதியையும் நாடும் அரசாங்கம் தனிமனித அமைதிக்கு உதவவேண்டும்.
ஒரு கல்லூரி பேராசிரியர் தனது மாணவர்களிடம் உலக வரைப்படம் கொண்ட தாளைக் தந்து அதை சின்ன சின்ன துண்டுகளாக கிழித்து மறுபடியும் ஒட்டித்தருமாறு கேட்டுக் கொண்டார். முயற்சித்து கொண்டிருத்த மாணவர்கள் சிலர், முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த மாணவர்கள் சிலர், அதிலே ஒரு மாணவர் மட்டும் மறு வினாடியிலே உலக வரைப் படத்தை இனைத்து தந்து விட்டார். இது எப்படி சாத்தியமானது. ஆச்சிரிய குறி அனைவருக்கும்.! பேராசிரியர் கேட்டார் எப்படி இலகுவாக உலக வரைப்படத்தை வரைந்துவிட்டாய்?.வேறு ஒன்றும் இல்லை ஐயா. உலக வரைபடத்திற்கு பின் புறம் மனித படம் ஒன்று இருந்தது வரையப்பட்டிருந்தது. மனித உருவத்தை இணைத்தேன். உலக வரைபடம் தானாக வந்து விட்டது என்றார். இப்படிதான் உலக சாமாதானம் என்பது மனித அமைதியில்தான் குடிக்கொண்டிருக்கின்றது. தனி மனித அமைதி உலக அமைதிக்கு அடிதளமானது. தனி ஒரு மனிதனின் துயரங்களூம் துன்பங்களூம் உலக அமைதிக்கு எதிரானது மட்டும் அல்ல அன்பான அறமான துய்மையான நல் வாழ்க்கைக்கும் பங்கமானதுதான்.
ஒரு மனிதனின் மன அமைதி அவன் குடும்ப நல அமைதிக்கும் வழிகோலும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இன்றைய நவ நாகரீக வாழ்க்கை கூறுகளில் மன அழுத்தம் என்பது நடைப்பிணமாக இயங்கும் மனித வாழ்க்கையில் ஒரு அங்கமாகிப் போனது பேரிடர்தான். இன்று சிறு குழந்தை முதல் பெரியவர் முதல் மன அழத்தத்தில் விழ்ந்துக் கிடப்பதுதான் வேடிக்கை. தேவை அடிப்படையில் வாழ்க்கை அமைந்து விடுவதால் பணச்சிக்கல் பல பேருக்கு மனச்சிக்களை வரவழைத்து விடுகிறது. பண்பான குடும்ப வாழ்க்கை விவாகரத்து வரைக்கும் வந்து விடுகிறது. ஏன்? தனி மனித அமைதியை மனிதன் தொலைத்து விட்டால், தொலைந்து போவது அவன் வாழ்வும் மட்டும் இல்லை உலக சமாதனமும் அமைதியும் கூட.
தாய்க்கு பின் தாரம் என்பார்கள். தவறான கருத்தாக்கங்களால் தாய் இறந்த பின் தாயின் நிலையில் மனைவி என்பவள் இருப்பாள், என்றும் தாயை போல் தன்னையும் பாரமாரிப்பாள் அல்லது இயங்குவாள் என்பது ஒரு பொது நோக்கு கருத்தாக நிலைப்பெற்று விட்டது. ஆனால் இந்த உலகிலே அற்புதமான அதிசயத்தக்க உறவு எது என்றால் தாயும் தாரமும்தான். இந்த இரு உறவுகள்தான் உணர்வுகளாளூம் உடலாலும் உதிரத்தாலும் மனிதனோடு பிணைக்கப்ட்டு வார்க்கப்பட்ட ஒரு உன்னதமான உறவாகும். ஒரு தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு அவர்களின் அவர்களின் திருமண பந்ததோடு நின்றுவிடுகிறது. ஒரு தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவு தாய் இறந்தவுடன் அவளோடு அந்த உறவும் மண்ணோடு புதைந்துவிடுகிறது. ஆனால் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள பந்தம் ஆயுள் காலம் முதல் தொடர்ந்து செல்கிறது. புனிதமான அந்த உறவுகள் கூட சில சமயம் தடம் மாரி தடுக்கி விழுவது எதனால்? மன அமைதியின்மைதான் முதல் முதற்காரணமாகிவிடுகிறது.
"சினம் இறக்க கற்றாலும், சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே" என்பது போன்று
உலகத்தில் அமைதி தழைக்க வேண்டும் என்றால் குடும்பத்தில் அமைதி தவழ வேண்டும் என்பது பொது நியதி. கணவன் மனைவியின் அன்புக்கு பாத்திரமாக வேண்டும். அது போல் மனைவி கணவனின் அன்புக்கு கட்டுண்டு வாழவேண்டும். திருமணமாகி சில காலங்களிலே பெரும் பிரச்சனைகளை சந்திக்கும் தம்பதிகள்தான் நிறைய உண்டு இன்றைய காலக்கட்டதில். காரணம் புரிந்துணர்வு என்பது சிறிதேனும் இல்லை என்பதே. கல்யானத்திற்கு முன் அழகாகத் தோன்றும் மனைவி கல்யானத்திற்கு பிறகு இராட்சசியாக தோற்றம் அளிக்க என்ன காரணம்? அன்பிலே குறை ஏற்படுவதுதான் காரணம். அந்த அன்பு மறைவதற்கு என்ன காரணம் மனதிலே ஏற்படும் இறுக்கம் தான் காரணமாகிவிடுகிறது.
மனைவியை நல்ல நண்பாரகவும் உற்ற தோழியாகவும் பார்க்கும் பக்குவம் நமக்கு எப்பொழுது ஏற்படப் போகிறது? அழகிய இராட்சசி, அன்பான இராட்சசியாக மாறியிருந்தால் இருந்தால் நல்லதுதானே? அவர்களும் மலரினும் மென்மையானவர்கள்தானே. மனப்பக்கும் பெற்றால் ஊடல் கூடல் ஆகும் கூடல் இன்பமாகும். மனம் திறந்த புத்தகமாக கணவன் மனைவி மாறும் பொழுது நமக்குள் இருக்கும் இடைவெளி அகழும் அன்பு பெருக்கும். அன்பொழுக பேசுவதனால் உறவுகள் கூடுமே தவிர குறையாது. அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்? வாழ்த்துங்கள்! கணவன் மனைவியை வாழ்த்தை விட வேறு ஒரு இன்பமையமான நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை.
இவளையா நான் அன்பே ஆறுயிரே என்று அழைப்பது? தெருவிலே போகும் தெரு நாய்யை அழைத்தாலும் அழைப்பேன் இவளை எப்படி அழைப்பது? என்று முறைத்துக் கொள்ளும் கணவனும் இருக்கத்தான் செய்கிறான். வீட்டிற்கு செல்வதற்கே இஷ்டம் இல்லை. அவள் முகத்தைய நன் பார்பது?என்று சொல்லி வெளியில் திரியும் கணவனும் உண்டு. கணவனின் அன்புக்கு ஏங்கி பண்புக் கெட்ட மனிதர்களிடம் வீழும் மனைவிகளும் உண்டு. வீண் மன அழுத்தத்தால் மன அமைதியை இழப்பதால் மன உறவும் கூட கசக்கத்தன் செய்கிறது.மனம் திறந்து பேசுங்கள் உங்கள் உறவுகளிடம். மதிப்பளித்து பேசுங்கள் உங்கள் மனைவிடம். ஏன் என்றால் உங்களில் பாதி அவள். தன்னில் பாதி அவள். தம்பதி. தம்பத்திய வாழ்க்கையும் தனிமனித அமைதியும் இல்லறத்தின் நல்லற திறவுக்கோள்கள்.
காலம் காலமாக நமது சமுதாயம் ஒரு வகையான பிற்போக்கு வலைப்பிண்ணலுக்குல் உட்பட்டு அடிமைதனமான சிந்ததனைகளை பூட்டி வார்த்தெடுக்கப்பட்டன. அடுப்பூதும் பெண்களூக்கு படிப்பெதற்கு என்று கேள்வி எழுந்தன? பெண்ணினம் தன்மான உணர்வுடன் வீறுக் கொண்டு எழுவற்கு பல அறிஞர் பெருமக்களின் போராட்டங்கள். சமுதாய நீரோட்டத்தை மாற்றி அமைத்தன. காலவோட்டத்தில் படிப்பறிவும் நல்ல வேலையும் பெற்ற பெண்ணினம் நானும் வேலை செய்கிறேன் நீயும் வேலை செய்கிறாய் நமக்கும் என்ன பாகுபாடு என்ற தன்முனைப்பு நிலைக்கு தள்ளப்பட்டனர்.
வீட்டிற்கு தேவையான இயந்திரம் வாங்க வேண்டும் நான் 500 போடுகிறேன் நீ ஒரு 500 போடு என்று வாழ்க்கை பங்குதாரர்கள். இன்று வியபார பங்குதாராகிவிட்டனர். எங்கும் கணக்கு வழக்குகள். உண்னதமான வாழ்க்கை இன்று உப்பு சப்பற்ற உதவாத பண்டமாற்று வியபாரமாகிவிட்டது. ஏன் இந்த நிலை? வாழ்க்கை வியபார நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. தனி மனித அமைதி இங்கு குடை சாய்ந்துவிட்டது. நாம் தவறுகள் செய்கிறோம், செய்த தவறுகளே துன்பங்களாக முளைக்கின்றன. வாழும் வாழ்க்கை முறை முரண்பாடாக அமையும் பொழுது வாழ்க்கையே துன்ப படலமாக மாறிவிடுகிறது. அதுவே பண்பு சார்ந்த மனவளத்தை ஆய்ந்துணர்ந்து வாழ்க்கையில் இனைத்துவிட்டால் இல்லற துன்பம் ஏது?
இல்லற கல்வி என்பது மனித நலத்தையும் அவனின் வளத்தையும் நல்ல நிலையில் நிறுவாகிக்கும் ஒரு அற நிலையம் ஆகும். மன வளம் என்பது அவனுள் வற்றாத ஜீவநதியாய் இயங்கும் ஜீவ காந்தமும் ஆன்மீக அன்பும் மன அமைதியும் தனி மனித வாழ்வின் சிறந்த வழிக்காட்டல் என்றால் மிகைப்படதக்க ஒன்று அல்ல. தனி மனித அமைதி குடும்ப அமைதிக்கும் உலக அமைதிக்கும் பெரும்பங்கு ஆற்றும். தனி மனிதனின் மன அமைதி சிக்கலான குடும்ப உறவுகளை பண்பு நிறைந்த பாதைக்கு வழி நடத்தும். மன வளத்தைக் கற்றால் மாண்புற வாழலாம். அன்பான பண்பான சீரிய தமிழ் நெறி வாழ்வும் அமையும். குடும்பத்தில் அமைதியும் ஓங்கும்.
குறிப்பு: மனவள கலை பேராசிரியர் சேர்மன் செல்வராஜ் அவர்களின் ''உலக அமைதி'' என்னும் தலைப்பில் பேசிய கருத்துக்களை மீள்பார்வை கொண்டு வரையப்பட்ட கருத்தாக்கம்.
நன்றி: மனோவியம் இணையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot