எதிலுமே அழகுணர்ச்சியோடு கொஞ்சம் கற்பனை உணர்வும் கலந்திருந்தால்... - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

1 ஜூலை, 2011

எதிலுமே அழகுணர்ச்சியோடு கொஞ்சம் கற்பனை உணர்வும் கலந்திருந்தால்...


[ இல்லறத்தின் இனிமையே தாம்பத்யம்தான். அதில் வழக்கமான முறையை பின்பற்றுவதை விட புதிது புதிதாக சில விஷயங்களை முயற்சி செய்யுங்கள்.
ஓவியம் வரையும் கலைஞனுக்குரிய கற்பனைத்திறனுடன் துணையை அணுகினால் உங்களுடைய துணையின் சந்தோஷத்திற்கு ஈடு இணையேது.
ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கும், அதை அடைவதற்கான கனவும் உண்டு. யாருக்காகவும் இலக்குகளை விட்டுவிட வேண்டாம். கனவுகளை கலைக்க கட்டாயப்படுத்தக் கூடாது.
சமையலறை என்பது மனைவிக்கு மட்டுமே சொந்தமானது என்று நினைக்க வேண்டாம். நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரைத்தான் மனைவிக்கு அதிகம் பிடிக்கும்.
கணவனைப் பொறுத்தவரை மனைவியின் பேச்சுக்குச் செவிகொடுக்க வேண்டும். ஏனெனில் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த இருக்கும் ஒரே ஊடகம் பேச்சுத்தான். அவளது உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிக்கின்றீர்கள் என்பதை அவளின் பேச்சுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை வைத்தே அவள் அறியமுடியும். எனவே நீங்கள் கொஞ்சம் செவிகொடுங்கள்!
ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அதிலும் பெண்களுக்கு புகழ்ச்சி, பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும்.
அதிலும் முக்கியமாக அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள். "என்ன இருந்தாலும் என் புருஷனைப்போல் வருமா...?"என்பது போன்ற வார்த்தைகள் எப்படிப்பட்ட கணவனையும் கவர்ந்துவிடும்.]
வீட்டில் செய்யும் சமையல் முதல் ஹோட்டலில் உண்ணும் உணவு வரை எதிலுமே சுவையும், அழகுணர்ச்சியும் வேண்டும் என்று நினைப்பது மனிதர்களின் இயல்பு.
புதிதாக திருமணமான தம்பதியர்களுக்கு இந்த எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கும். சமையலாகட்டும், தாம்பத்யமாகட்டும் எதிலுமே அழகுணர்ச்சியோடு கொஞ்சம் கற்பனை உணர்வும் கலந்திருந்தால் அதன் சுவையே அலாதிதான்.
என்ன செய்தால் பிடிக்கும் என்று குழம்பித் தவித்து தினசரி புதிது புதிதாக ஏதாவது முயற்சி செய்து கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படி என்றால் இது உங்களுக்கானதுதான். உங்கள் வாழ்க்கைத் துணையை கவருவதற்காக கூறப்பட்டுள்ள சில வழிமுறை பின்பற்றிப் பாருங்கள்
இல்லறத்தின் இனிமையே தாம்பத்யம்தான். அதில் வழக்கமான முறையை பின்பற்றுவதை விட புதிது புதிதாக சில விஷயங்களை முயற்சி செய்யுங்கள். ஓவியம் வரையும் கலைஞனுக்குரிய கற்பனைத்திறனுடன் துணையை அணுகினால் உங்களுடைய துணையின் சந்தோஷத்திற்கு ஈடு இணையேது.  
ஆச்சரியப்படுத்துங்கள்
பணிபுரியும் இடங்களில் புதிய புதிய சிந்தனைகளுக்குத்தான் வரவேற்பும் மதிப்பும் உண்டு. அதுபோலத்தான் இல்லறத்திலும். சினிமா சீன்களை உள்ளே புகுத்த வேண்டாம்.
சின்ன சின்ன ஆச்சரியங்கள். எதிர்பாராத சந்தோஷங்களை ஏற்படுத்துங்கள். ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் இந்த சந்தோஷங்கள்தான் வாழ்க்கைப் பயணத்தின் கடைசி கட்டம் வரை தித்திப்பை தரும்.
சாதிக்க உற்சாகமளியுங்கள்
இன்றைய நவீன யுகத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் சாதித்து வருகின்றனர். சமையலறை மட்டுமே அவர்களின் உலகமல்ல என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனைவியின் திறமையை மதித்து அவர்களை ஊக்குவித்தால் அன்றைக்கே வாழ்க்கைத் துணைவருக்கு அடிமை சாசனம் எழுதித்தருவது நிச்சயம்.
ஆலோசனை கேளுங்கள்
புதிதாக ஒரு முடிவெடுக்கும் போது ஒருவருக்கொருவர் கலந்து ஆலோசனை செய்யுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலை பற்றியதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் வாழ்க்கைத்துணையின் கருத்துக்கு மதிப்புக் கொடுங்கள்.
கட்டாயப்படுத்த ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கும், அதை அடைவதற்கான கனவும் உண்டு. யாருக்காகவும் இலக்குகளை விட்டுவிட வேண்டாம். கனவுகளை கலைக்க கட்டாயப்படுத்தக் கூடாது.வேண்டாம்.
துணையின் பேச்சுக்கு மதிப்பு கொடுங்கள்
ஆண் சிந்திக்கும் விதமும், பேசும் முறையும் பெண்ணினது சிந்தனை, பேச்சு என்பவற்றை விட மாறுபட்டதாகும். இதையும் இரு சாராரும் இதயத்தில் இறுத்திக்கொள்ள வேண்டும்.
இருவரும் இருவரது பேச்சையும் முறையாகப் புரிந்துகொள்ள முற்பட வேண்டும். தவறாகப் புரிந்துகொண்டு அந்தத் தவறான புரிதலின் அடிப்படையில் தப்பான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளக் கூடாது.
கணவனைப் பொறுத்தவரை மனைவியின் பேச்சுக்குச் செவிகொடுக்க வேண்டும். ஏனெனில் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த இருக்கும் ஒரே ஊடகம் பேச்சுத்தான். அவளது உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிக்கின்றீர்கள் என்பதை அவளின் பேச்சுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை வைத்தே அவள் அறியமுடியும். எனவே நீங்கள் கொஞ்சம் செவிகொடுங்கள்!
ஒருவரையொருவர் புகழ்ந்து கொள்ளுங்கள்
ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அதிலும் பெண்களுக்கு புகழ்ச்சி, பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள். "என்ன இருந்தாலும் என் புருஷனைப்போல் வருமா...?" என்பது போன்ற வார்த்தைகள் எப்படிப்பட்ட கணவனையும் கவர்ந்துவிடும்.
அழகில் கவனம் செலுத்துங்கள்
அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தபட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்கு போகும்போது உங்கள் மனைவிக்கு மேட்சாக நீங்களும் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.
கெட்டிக்காரத்தனம் முக்கியம்
சமையலறை என்பது மனைவிக்கு மட்டுமே சொந்தமானது என்று நினைக்க வேண்டாம். நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரைத்தான் மனைவிக்கு அதிகம் பிடிக்கும்.
அக்கறை காட்டுங்கள்
வாழ்க்கையில் இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழப் பழக வேண்டும். துணையிடம் மட்டுமல்ல அவரின் குடும்பத்தினரிடமும் அக்கறை காட்டுங்கள்.
சில நேரங்களில் இது அவசியம்
எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வப்போது, சில வசனங்களை பேசுவதில் தவறில்லை. உன்னைத் தவிர இந்த உலகத்தில் சிறந்தது எதுவுமே இல்லை என்பது போல பேசினால் வானத்தில் பறக்க ஆரம்பித்து விடுவார் உங்கள் மனைவி.
பகிர்ந்து கொள்ளுங்கள்
தனிமையான தருணங்களில் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களை பற்றியும் பேசுங்கள்-போரடிக்காத வகையில். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
துணையை புகழுங்கள்
ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அதிலும் பெண்களுக்கு புகழ்ச்சி, பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள். "என்ன இருந்தாலும் என் புருஷனைப்போல் வருமா...?" என்பது போன்ற வார்த்தைகள் எப்படிப்பட்ட கணவனையும் கவர்ந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot