கணவனை சந்தேகப்படலாமா? - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

14 செப்டம்பர், 2011

கணவனை சந்தேகப்படலாமா?


கணவனை சந்தேகப்படலாமா? .
சுவையான இரு சம்பவங்கள்
"ஏன் இவ்ளோ லேட்? எங்கே போயிட்டு வர்றீங்க" – புது மனைவி மும்தாஜின் அதிகாரமான குரல் நஜீமை முதன் முறையாக அதிரச் செய்தது.
"வரும் வழியில் பெட்ரோல் இல்லாமல் டூவீலர் நின்றுவிட்டது. அதான் லேட்டாகி விட்டது".
"இந்த உப்பு சப்பு இல்லாத காரணம் எல்லாம் வேண்டாம். உண்மையில் எங்கே போயிட்டு வர்றீங்க".
"ஏன் மும்ஸ் (மும்தாஜை சாதாரணமாக அவன் செல்லமாக கூப்பிடும் முறை) இப்படியெல்லாம் கேட்குற? உன் கிட்ட நான் ஏன் பொய் சொல்லணும்?"
"அதைத்தான் நானும் உங்க கிட்ட கேக்குறேன்?"
"நம்பு மும்ஸ். உன் மேல சத்தியமா ஆபீசில் இருந்து நேரா வீட்டுக்குத்தான் வர்றேன்"
நஜீம் எவ்வளவோ சொல்லியும் மும்தாஜ் அவனை புரிந்து கொண்டபாடில்லை. அவன் கூறியதையும் நம்பவில்லை.
ஏன் அவர்களுக்குள் ஆரம்பத்திலேயே இந்த முட்டல், மோதல்?
நஜீமுக்கும், மும்தாஜுக்கும் 3 மாதத்திற்கு முன்புதான் திருமணம் ஆனது. சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள். நஜீமுக்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை. மும்தாஜும் பட்டதாரி பெண். வேலைக்கு செல்வது பற்றி இன்னும் அவள் முடிவெடுக்கவில்லை.
தன் மீதான சந்தேகம் மும்தாஜுக்கு வலுத்ததால் அவளை பெண் சைக்காலஜிஸ்ட் ஒருவரிடம் அழைத்துச் செல்ல முடிவெடுத்தான் நஜீம். இதை அப்படியே அவளிடம் சொன்னால், அவளது சந்தேகம் இன்னமும் அதிகமாகும் என்று எண்ணியவன், நேராக தான் மட்டும் அந்த பெண் சைக்காலஜிஸ்ட் வீட்டிற்குச் சென்றான்.
தனது நிலைமையை முழுமையாக கூறியவன், ஒரு உறவினர் என்கிற பார்வையில் தனது மனைவிக்கு அறிவுரைகள் கூறுமாறு கேட்டுக்கொண்டான். அதற்கு பெண் சைக்காலஜிஸ்ட்டும் ஒத்துக்கொண்டார்.
மும்தாஜிடம், விருந்தினர் ஒருவர் தங்களை விருந்துக்கு அழைத்திருப்பதாக பொய் சொல்லி, அவளை சைக்காலஜிஸ்ட் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அந்த சைக்காலஜிஸ்ட்டும் உறவினர் போலவே மும்தாஜிடம் பேசினார். அவர் சில கேள்விகளைக் கேட்டபோது, மும்தாஜ் தனது மனதிற்குள் பூட்டி வைத்திருந்த பல விஷயங்களை கொட்டத் தொடங்கினாள்.
எந்தவொரு ஆணுக்கும் அழகான மனைவி இருந்தாலும், அடுத்த பெண் மீதான மோகப் பார்வை மட்டும் குறையாது என்று சக தோழியர் கூறியதை அப்படியே மனதில் ஆழமாக பதிந்து வைத்திருந்தாள் மும்தாஜ். நாம் எவ்வளவுதான் தைரியமாக – அதிகாரமாக பேசினாலும், கடைசியில் கணவனிடம் பணிந்து தான் போக வேண்டும் என்றும் கூறி, அறிவுரை என்கிற பெயரில் அவளை மனக்குழப்பத்திற்கு ஆளாக்கி உள்ளனர், அந்த தோழியர்.திருமணமாகி தனிக்குடித்தனம் வந்த நிலையில் பக்கத்து வீட்டுப் பெண்கள் மும்தாஜிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.
`காலம் கெட்டுக் கிடக்குதும்மா. உன் புருஷனை நீதான் பாத்துக்கணும். புருஷன் தொடர்ந்து வீட்டுக்கு தாமதமா வந்தா, வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் பிடித்துவிட்டார் என்று அர்த்தம். இந்த விஷயத்தில் நீ ஏமாந்து விடாதே’ என்று அவர்கள் கூறியது மும்தாஜை மேலும் குழப்பமாக்கி விட்டது.
இதை உறுதி செய்வது போல், புது மனைவி மீதான ஆசை, மோகத்தால் தினமும் அலுவலகம் முடிந்ததும் வேகமாக வந்த நஜீம், அதன் பிறகு மனைவி சலித்துப் போனதாலோ என்னவோ தாமதமாக வரத் தொடங்கினான். இதுவே மும்தாஜின் சந்தேகத்தை பூதாகரமாக கிளப்பி விட்டு விட்டது.
ஒரு உறவினராக சைக்காலஜிஸ்ட் தந்த பல்வேறு அறிவுரைகளுக்குப் பிறகு நஜீமை முழுமையாக புரிந்து கொண்டாள் மும்தாஜ். இந்த விஷயத்தில் நஜீமுக்கும் மனைவியிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சில உண்மைகள் சொல்லப்பட்டன. அதன்பிறகே அவர்களது வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்தது.
இதே போன்ற இன்னொரு சந்தேகப்பிராணியின் கேஸ்தான் இதுவும்;
சிராஜும் மனைவியின் சந்தேகப் பிடியில் சிக்கி மீண்டவர் தான். தான் தவறே செய்யாத நிலையில், தன் மீது சந்தேகப்படும் மனைவியை மேலும் உசுப்பேற்ற வேண்டும் என்பதற்காக காலையில் 8 மணிக்கு வேலைக்கு சென்றவர் இரவு 10 மணிக்குத்தான் வீடு திரும்பினார். மனைவி என்னதான் சந்தேகத்தோடு கத்தினாலும், அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு வந்தார்.
ஒருநாள் இரவு 10 மணிக்கு மேலாக வீடு திரும்பிய சிராஜுக்கு அன்போடு உணவை பரிமாறிய அவரது மனைவி, "ஆமாங்க... உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா? நம்ம தெருவுல பேய் நடமாடுதாம். நேற்று கூட ஒருவரை பேய் பிடித்துவிட்டதாம்" என்று சும்மா ஒரு பொய்யை கொளுத்திப் போட்டாள்.
`பேயா..... உன்னையே நான் சமாளிக்கும்போது, எந்த பேயும் என்னை ஒன்றும் செய்து விடாது’ என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டவர், "அப்படியா?" என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டதோடு அமைதியாகிவிட்டார்.
மறுநாள் வழக்கம்போல் இரவு 10 மணிக்குப் பிறகு வீட்டுக்கு வந்தார் சிராஜ். அன்று வழக்கத்திற்கு மாறாக வீட்டின் முன்புறம் இருந்த பெரிய கேட்டை பெரிய பூட்டு போட்டு பூட்டிவிட்டார் அவரது மனைவி. எவ்வளவோ கத்திப் பார்த்தும் அவரது மனைவி வெளியே வரவேயில்லை. செல்ஃபோனை தொடர்பு கொண்டும் பயனில்லை.
நேரம் வேகமாக நகர்ந்தது. நேரம் என்னாச்சு என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது அது சரியாக நள்ளிரவு 12 மணியை தொட்டுக் கொண்டிருந்தது. அந்தநேரத்தில் சில தெருநாய்கள் வேகமாக குரைக்க, முந்தைய நாள் மனைவி சொன்ன பேய் ஞாபகம் வந்தது.
பேய் இல்லை என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்ட சிராஜ், திடீரென்று நள்ளிரவு 12 மணிக்கு ஆள் நடமாட்டமே இல்லாத நடுத்தெருவில் நின்றதால் சற்று நடுங்கித்தான் போனார். நீண்ட நேரம் நின்றதால் கால் வலிக்க, அருகில் இருந்த மின் கம்பத்தின் அடியில் அமர்ந்தார். ஒரு நிமிடம் தான் ஓடியிருக்கும். வழக்கமாக பகலில் `கட்’ ஆகும் மின்சாரம் அப்போது திடீரென்று `கட்’ ஆனது.
பயத்தில் வேகமாக எழுந்த சிராஜின் சட்டையை யாரோ பிடித்து இழுப்பது போல் இருந்தது. பேய்தான் இழுக்கிறது என்று நினைத்து, அலறியபடியே தனது வீட்டு கேட்டின் முன்பு போய் விழுந்தார். அவரது கை, கால்கள் வேகமாக நடுங்க ஆரம்பித்தன.
தலை நிமிர்ந்து, வீட்டின் கேட்டைப் பார்த்தார். அது லேசாக ஆட ஆரம்பித்து, பின் பலமாக நடுங்கியது. உண்மையிலேயே பேய் வந்துவிட்டது என்ற அதிர்ச்சியில் மயக்கமாகிப் போனார் சிராஜ்.
மறுநாள் காலையில் வெகுநேரத்திற்குப் பிறகே கண் விழித்தார். வீட்டுக்குள் அவர் படுத்திருக்க, அருகில் அவரது மனைவியும், மகளும் சோகத்தோடு நின்று கொண்டிருந்தனர்.
சிராஜ் கண் விழித்ததைப் பார்த்த அவரது மனைவி, "நேற்று இரவு மின் கம்பத்தில் என்ன செய்தீர்கள்? உங்கள் சட்டையின் பாதிப் பகுதி அதில் இருந்த கம்பியில் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. நீங்களோ கேட் வாசலில் மயங்கி கிடக்கிறீர்கள். பேய் வந்ததாக நான் சும்மாதான் சொன்னேன். ஆனால், நீங்களோ பேய் அறைந்தது போல் கிடந்தீர்களே...." என்று சொன்னபோதுதான், `அப்போ என்னை இழுத்தது பேய் இல்லையா?’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டார் ராமையா. நடந்த சம்பவத்திற்குப் பிறகு இரவு 7 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வர ஆரம்பித்துவிட்டார் அவர்.
கணவன் மீது சந்தேகம் வந்தால், இந்த பேய் பிரச்சினை மட்டுமல்ல, பல பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி வரும். தம்பதியர் இருவருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டு விடும்.
அலுவலகத்திலும், அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியிலும் எவ்வளவோ நெருக்கடிகளை ஒரு ஆண் சந்திக்க நேரலாம். வெளியில் தான் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு ஆண் வீட்டில் கொட்டினால், அங்கே நிம்மதி போய் விடும்.
மொத்தத்தில் மனைவி தன்னிடம் அன்பு மழை பொழிந்தால் எந்த கணவனும் தொடர்ந்து தாமதமாக வீட்டிற்கு வர மாட்டான். நல்ல கணவனாகத்தான் இருப்பான். இதில் விதிவிலக்காக இருப்பவர்களும் உண்டு. மனைவி உயிருக்கு உயிராகவே வைத்திருந்தாலும் இப்படிப்பட்டவர்கள் இரவில் கொஞ்சமாச்சும் ஊர் சுற்றிவிட்டுத்தான் வீட்டுக்குள் காலெடுத்து வைப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களை என்ன செய்யலாம்? இதுபற்றி முடிவெடுக்க வேண்டியவர்கள், அவர்களது மனைவிமார்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot