கணவனால் பாதிப்படையும் பெண்கள் கவனத்திற்கு!
இல்லற உறவு இருபுறமும் நீடித்திருக்காமல் பகை, விரிசல், துண்டித்தல் ஏற்படுதலுக்கு சகிப்புத்தன்மையற்ற போக்கு காரணம். கணவன், மனைவி, குடும்ப தலைமை, உறுப்பினர் புஜம் தட்டலில் வளுத்தவர் கரம் வெற்றியடைகிறது. இளைத்தவர் வாழ்வு பாதிப்புக்குள்ளாகிறது.
பெண்புறம் படிப்பற்றவர்களாக, பாமரர்களாக, பலவீனர்களாக இருந்தால், பிரச்சினையை அணுகுவது அறியாது பள்ளத்தில் வீழ்கின்றனர். ஆண்புறத்தில் இதே நிலை இருந்தால் பெண் வீட்டாரால் பழிவாங்கும் போக்கு நிகழ்கிறது.
தம்பதிகள் இருவரது இல்லற வாழ்வும் முக்கியத்துவத்துக்குரியது. ஒருவருக்கொருவரால் பாதிப்படையக்கூடாது. குழந்தைகள் எதிர்காலம் தடம் புரளக்கூடாது. குடும்பத்தில் எழக்கூடிய பிரச்சினைகளைத் தீர்க்கவே ஜமாத்துகள், நடுவர்கள் பாடுபடுகின்றனர். பிரச்சினையின் வேர் புரியாமல், உணர்ச்சி உந்துதலுக்கு ஆட்பட்டு பல பெண்கள் மண வாழ்வை இழப்பதோடு, கணவனிடமிருந்து தாம் கொடுத்தவற்றை திரும்பப் பெறவியலாது.குழந்தைகளுடன் நிர்க்கதியாக நின்று தவிக்கின்றனர். அடுத்தொரு வாழ்க்கை அமையாமலேயே போகிறது. ரவுடிக் கணவன் குடும்பத்தாரால் அநாதைகளாக்கப்படும் பெண்களுக்காக அரசு அறிவித்த சட்ட நடைமுறை விளக்கம் இங்கு தரப்படுகிறது. பழிவாங்குதலுக்கு இதைப் பயன்படுத்தாமல் உண்மையிலேயே கணவனால், குடும்பத்தாரால் பாதிப்படைந்த பெண்கள் இதை நோக்கி நகரலாம். முன்னதாக குடும்பப் பெரியவர்கள் மத்தியஸ்தம், ஜமாத்தினர் பஞ்சாயத்துக்கு தம்மை உட்படுத்த வேண்டும் இரண்டையும் மீறும் கணவன் குடும்பத்தாரை திருத்த இங்கு தரப்பட்டுள்ள விதிகளின்படியிலான நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
2005ஆம் ஆண்டு மத்திய அரசு குடும்ப வன்முறைச் சட்டம் கொண்டு வந்தது. பாதிக்கப்பட்ட பெண் நேரடியாக மகளிர் காவல் நிலையம் செல்லாது நடவடிக்கை செயல்படுத்த (P.O) எனப்படும் ‘‘ப்ரடொக்ஷன் அதிகாரிகள்’’ நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்ட சமூக நலவாரியங்களுடைய அலுவலகங்களிலும் பணிப் பொறுப்பிலிருக்கின்றனர். மகளிர் போலிஸ் நிலையம் சென்று வழக்குப் பதிவு செய்தலுக்குப் பெயர் (F.I.R), P.O. க்களிடம் பதிவு செய்வதற்குப் பெயர் (D.I.R.) ‘‘டொமஸ்டிக் இன்சிடன்ட் ரிப்போர்ட்’’. பாதிப்படைந்த பெண்ணிடம் நேரடி வாக்குமூலம் பெறும் றி.ளி. வழக்கிற்குரிய ஆவணங்களைத் திரட்டுவார். திரட்டப்பட்ட ஆவணங்களை 3 நாட்களுக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யக் கூறுகிறது சட்டம்.
பாதிப்படைந்தவர் வாழும் பகுதி போலிஸ் ஸ்டேஷன் மூலமாக பிரச்சினை செய்யும் கணவனுக்கு நோட்டீஸ் தரப்படும். கணவன் வீட்டில் இல்லாத நிலையில் வீட்டிலிருக்கும் உறவுக்கார ஆண்கள் பெற்றுக் கொள்ளலாம். எவரும் பெற மறுக்கும் நிலையில், 2 பேர் சாட்சியாக வைத்து கணவனது வீட்டுக் கதவில் ஒட்டப்படும். 3வது நாள் கோர்ட்டில் வழக்கு ஹியரிங். தாக்கல் செய்த 60 நாட்களுக்குள் வழக்கு முடிக்கப்படவேண்டும் சட்டம்.
குடும்ப வன்முறைச் சட்டம் பிரிவு&31இன் படி தன்னிடம் பாதுகாப்பு நாடி வரும் பெண்களுக்கு றி.ளி. க்கள் ஆதரவளித்து ஒத்துழைக்க வேண்டும். மறுத்தால், ஒருவருட சிறை, 20,000ம் அபராதம் உண்டு. நீதியரசர் டி.என்.பாஷா ஆந்திரா மகிளசபாவில் நடைபெற்ற பயிலரங்கில் சென்னையிலுள்ள 27 மகளிர் காவல்நிலைய பெண் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் ஆற்றிய உரையின் போது குறிப்பிட்டுள்ளார். சில இடங்களில் றி.ளி.க்கள் நியமிக்கப்படவில்லை. அங்கே சர்வீஸ் ப்ராவிடர்கள், ழி.நி.ளி.க்கள் நடவடிக்கை எடுக்க சட்டப்பிரிவு&4 அனுமதித்திருப்பதாகக் குறிப்பிடுகிறார் வேலூர் மாவட்ட றி.ளி. சரோஜா திருவேங்கடம்.
பாதிக்கப்பட்ட பெண் றி.ளி.விடம் வழக்குப் பதிவு செய்யும் போது கணவனால் பாதிப்பு? குடும்ப உறவுகளால் பாதிப்பு? தெளிவாகக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு மாவட்ட சமூக நலவாரிய அலுவலகங்களிலும் றி.ளி.க்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. (சென்னை மாவட்டத்துக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சிங்காரவேலர் மாளிகை, 8வது தளத்தில் P.O.க்கள் இருக்கின்றனர். அவர்களது அலைபேசி : சாந்தி & 9940801968, பிரிசிலா & 9789876656. அலுவலக தொடர்பு எண்கள் : 044&25264568, 25674501. வேலூர் மாவட்ட றி.ளி. சரோஜா திருவேங்கடம் & 9894054824)
-சோதுகுடியான்
செப்டம்பர் 2011 முஸ்லிம் முரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக