முஸ்லிம்களும் பொங்கலும் - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

25 டிசம்பர், 2017

முஸ்லிம்களும் பொங்கலும்



சகோதரர் ஜோ ‘தமிழ் கத்தோலிக்கரும் பொங்கலும்’ என்ற பதிவில் பொங்கல் திருநாளை ஒட்டுமொத்த தமிழர்களின் கலாச்சார திருநாளாகச் சொல்லி இருந்தார்.மேலும்,”கிறிஸ்தவக் கத்தோலிக்கர்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை; தமிழர் என்ற அடிப்படையில் பொங்கலைக் கொண்டாடுகின்றனர்” என்று சொல்லி இருந்தார். இதேபோல் சென்றவருடம் ‘கல்வெட்டு’ என்ற பதிவர், “தமிழர்களாகிய முஸ்லிம்கள் ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை?” என்று கேட்டிருந்தார்.
கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகர்களும் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். நடைமுறையில் பொங்கல் தினம் என்பது சூரிய வழிபாடு, பசு வழிபாடு என இந்து மதம் சார்ந்த தமிழர்கள் பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது. எனவே,பொங்கல் என்பது முஸ்லிம்களும் கொண்டாடும் பொதுவான திருநாள் அல்ல. படைப்புகளுக்கு வணங்குவதைவிட படைத்தவனை வணங்குவதே பகுத்தறிவு!
பொங்கல் குறித்த முஸ்லிம்களின் கண்ணோட்டம் தெளிவாக உள்ளது.இறைவனைக்கு நன்றி செலுத்துவதையும் படைப்புகளுக்கு நன்றி செலுத்துவதையும் இஸ்லாம் தெளிவாகச் சொல்லியுள்ளது:
* வணங்குவதற்குரியவன் படைத்த இறைவனேயன்றி படைப்புகள் அல்ல.
* மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன்,இறைவனுக்கு நன்றி செலுத்தியன் ஆக மாட்டான்.
* உழைப்பவரின் வியர்வை நிலத்தில் விழும் முன் உழைப்பிற்கான கூலியைக் கொடுத்து விடச்சொல்லி உடல் உழைப்புக்கு உண்மையான மரியாதை கொடுப்பது இஸ்லாம்.
முஸ்லிம்களின் கட்டாயக் கடமைகளில் ஒன்றான ஜகாத் பொருளில் கஷ்டப்பட்டு நீர் பாய்ச்சி, உழுது விளைந்த விளைபொருளுக்கு 5% சதவீதமும், இயற்கையாக விளைந்த பொருள்களுக்கு 10% சதவீதமும் ஜகாத் என உடலுழைப்பைக் போற்றுகிறது இஸ்லாம்.
ஒருபக்கம் நன்றி செலுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கம் அதே நாளில், ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகளைக் கொடுமைப் படுத்துகிறோம் இதை வீரம் என்றும் சொல்கிறோம்! மாடுகளால் மனிதன் அடையும் கொடுமையை ‘விழுப்புண்’ என்று ஏமாற்றுகிறோம். நாளெல்லாம் நமக்காக உழைத்த தொழிலாளியை விலங்குகளுடன் மோத விட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கிறோம். இதுவா உழைப்பவருக்கும் அதற்கு உதவிய விலங்குகளுக்கும் செய்யும் நன்றி? இஸ்லாம் இவ்விசயத்திலும் தெளிவாக இருக்கிறது . விலங்குகளைக் கொடுமை படுத்துவதை இஸ்லாம் தடுத்துள்ளது.
ஒரு சந்தர்ப்பத்தில் முஹம்மது நபி தன் தோழர்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். நபிகளார் வரும் பாதையில் இருந்த புற்றிலிருந்து எறும்புகள் ஊர்ந்து செல்வதைக் கண்டு , அவ்வெறும்புகளால் நபிகளாருக்கு சிரமம் ஏற்பட்டு விடும் என்று கருதி, ஒரு தோழர் எறும்பு புற்றுக்கு தீ வைத்தார் . இதனைக் கண்ட முஹம்மது நபி (ஸல்…) உயிர்களை தீயிட்டு எரிப்பதைக் வன்மையாகக் கண்டித்தார்கள்.
அபூஹுரைரா ரலி… அவர்கள் அறிவிக்கிறார்கள்: “தாகித்திருந்த ஒரு நாயின் தாகத்தை தீர்ப்பதற்காக கிணற்றில் இறங்கி நீர் கொண்டுவந்து நாயின் தாகத்தைத் தீர்த்த மனிதனின் செயலை அல்லாஹ் நன்றியுடன் பொருந்திக் கொண்டு அவனின் பாவங்களை மன்னித்து விட்டான் ” என்று பெருமானார் சொன்னபோது, “இறைத்தூதரே, விலங்குகளுக்கு உதவினாலும் அல்லாஹ்விடத்தில் வெகுமதி கிடைக்குமா?” என்று வினவியபோது, “ஆம்! விலங்குகளுக்கு உதவி செய்தாலும் வெகுமதியுண்டு” என்றார்கள்.இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு பூனையை வீட்டிலடைத்து உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுக் கொன்ற பெண் நரகில் வேதனை செய்யப்படுவதாகச் சொன்னார்கள் (புகாரி).
உழைப்பவரின் உழைப்புக்கு உண்மையான மரியாதை கொடுப்பது,வெறும் வாய் வார்த்தைகளால் அல்ல.                                       
                                                                                                         LINK.islamkalvi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot