ஐயம்: எனக்கு சிறு வயது முதலே பார்ப்பனர் அணியும் பூணூல் மீது ஒரு ஆசை. இதையறிந்த எனது பார்ப்பன நண்பரொருவர் சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு பூணூலைப் பரிசாக தந்தார். எங்கள் பள்ளிவாசல் இமாமிடம் இதை முஸ்லிம் அணியலாமா என்று கேட்டபோது "தங்கம் அணிவதுதான் ஆண்களுக்கு ஹராம். நூலை அணிவது ஹராமல்ல. புடிச்சிருந்தா பிஸ்மில்லாஹ்னு சொல்லி போட்டுக்க" என்று சொல்லி சிரித்தார். சில சமயம் அந்த பூணூலைபிஸ்மில்லாஹ் சொல்லி அணிந்து நான் மகிழ்கிறேன். எனது பிராமின் நண்பரின் குடும்பத்தாரும் அவர்களுக்கு ஒரு முஸ்லிம் கண்ணியம் தருவதாக பாராட்டுகின்றனர். (சகோதரர் சாணக்கியன்)
அவரும் என்னிடமிருந்து திருக்குரானை வாங்கி மிக பயபக்தியுடன் வைத்திருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ் சூராவை மனனம் செய்து காலை மாலை ஓதுகிறார். இது மார்க்க அடிப்படையில் சரியா தவறா என்பது புரியவில்லை. இதனை நீங்கள் விளக்க முடியுமா? நன்றி.
பதில்: சகோதரர் சாணக்கியன், உங்கள் வினாவில் கண்டுள்ளபடி, பார்ப்பன நண்பர் பூணூலைப் பரிசாகத் தந்தார் என்பது ஏற்கும்படி இல்லை. ஏனெனில் அவர்களின் மதம் மற்றும் உயர் சாதியின் அடையாளமாகும் பூணூலை அவர்கள் பிராமணர்க்கு மட்டுமே இளம் வயதிலேயே உரிய "உபநயன"ச் சடங்குகளுடன் அணிவிப்பர்.
எல்லா மதங்களும், நெறிகளும் ஒன்றுதான். மதங்களுக்கிடையே எவ்வித வேறுபாடுகளும் இல்லை என்கிற மந்திரமே எம்மதமும் சம்மதம் என்கிற கொள்கை(!?)யாகும். கடவுள் ஒன்றுதான் என்பதும் சரி, கடவுள் மூன்று என்பதும் சரி, கடவுள் பலர் என்பதும் சரி என்று ஒப்புக் கொள்ளும் நிலையற்ற கொள்கையாகிய எம்மதமும் சம்மதம் என்கிற கோட்பாட்டையொட்டி உங்கள் கருத்துகள் அமைந்துள்ளன. ஓரிறைக் கொள்கையை உறுதியுடன் பிரகடனப்டுத்தும் இஸ்லாம், பல தெய்வக் கொள்கைகளை உள்ளடக்கிய எம்மதமும் சம்மதம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.
''குல் யா அய்யுஹல் காஃபிரூன்'' என விளித்து,
''நிராகரிப்பாளர்களே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன்''
''மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்களுமல்லர்''
''நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனுமல்லன்''
''இன்னும் நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்களுமல்லர்''
''உங்களுக்கு உங்கள் மார்க்கம் எனக்கு எனது மார்க்கம்'' (அல்குர்ஆன் 109வது அத்தியாயத்தின் வசனங்கள்)
நிராகரிப்பாளர்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்களல்லர் எனத் திரும்பத் திரும்ப எடுத்துரைத்து, ஏக இறை வழிபாட்டிற்கும் பல தெய்வ வழிபாட்டிற்கும் பெரும் இடைவெளி உள்ளது எனவும், ஒரிறைக் கொள்கையும் பல தெய்வக் கொள்கையும் ஒருபோதும் ஒன்றிணையாது எனவும் இறைத்தூதர் வாயிலாக மாநிலத்தின் மாந்தருக்கு மேல்காணும் வசனங்கள் மூலம் இறைவன் கூறுகின்றான்.
"எல்லா மதமும் சம்மதம்" என்கிற கொள்கை, இறைத் தன்மையை மிகச் சரியாகப் புரிந்து விளங்கியதாக இல்லை. அதாவது, இறைவன் தன்னைப் பற்றி எவ்வாறு குறிப்பிட்டுக் கூறிக்கொள்கிறானோ அந்தப் பொருளில் இறைவனைப் புரிந்து கொண்டிருக்கவில்லை!
எடுத்துக் காட்டாக: பூணூல் அணிவது பிராமணர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. ஏதோ தோளில் துண்டு போடுவதைப் போல் அவர்கள் பூணூலைப் போட்டுக் கொள்வதில்லை. அதற்கென நாள் நட்சத்திரம், ஆவணி அவிட்டம் பார்த்து மந்திரங்கள் ஓதி சடங்குகள் நடத்தப்படுகின்றன. இவை அவர்களின் கடவுள் நம்பிக்கையையொட்டி நிகழ்கின்ற தெய்வீக அம்சமாக பிராமணர்கள் நம்புகின்றனர். இது அவர்களின் மதக் கொள்கை.
பிராமணரின் பூணூல் அணியும் மதக் கொள்கையை ஆதரித்து ஒரு முஸ்லிம் விரும்பி பூணூல் அணிந்து கொண்டால், அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவனாவான். (உங்கள் கூற்றுப்படி) ஒரு முஸ்லிம் பூணூல் அணியலாம் எனச் சொன்ன பள்ளிவாசல் இமாமுக்கு, ஆண்கள் தங்கத்தை அணிவதைவிட பிற மதக் கொள்கையையொட்டி பூணூல் அணிவது இறைவன் மன்னிக்காத இணைவைக்கும் குற்றமாகும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை!
நீங்கள் பிஸ்மில்லாஹ் சொல்லி பூணூல் அணிந்தாலும் அல்லது சொல்லாமலே அணிந்தாலும் பூணூல் அணிவது பிற மதச் சடங்கு என்பதால் அதை இஸ்லாம் ஏற்காது.
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 2697, முஸ்லிம் 3540)
இன்னும், பிறமத கலாச்சாரத்தைக் கடைபிடிப்பவன் நம்மைச் சார்ந்தவனல்ல என்றும் இஸ்லாம் எச்சரித்துள்ளது!
அடுத்து,
உங்கள் பிறமத நண்பர் குர்ஆனை ஓதுவதாக எழுதியுள்ளீர்கள். குர்ஆனைப் படித்து அவர் நேர்வழி பெற பிரார்த்திப்போம். இஸ்லாத்தை ஏற்காமல் அவர் அல்ஹம்து சூராவை தமது ஆயுள் முழுக்க ஓதினாலும் எந்த நன்மையையும் அடைந்திட முடியாது!

(இறைவன் மிக்க அறிந்தவன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக