தோலையும் காலையும் பத்திரமா பாத்துக்கொள்ளுங்கள்! - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

9 ஏப்ரல், 2012

தோலையும் காலையும் பத்திரமா பாத்துக்கொள்ளுங்கள்!


தோலையும் காலையும் பத்திரமா பாத்துக்கொள்ளுங்கள்!
 நீரிழிவு நோய்
தாக்கியவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். கண் பாதிப்பு, தூக்கமின்மை, இதயாநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதலோடு சரும பிரச்சினைகளும் நீரிழிவு நோயாளிகளை பெருமளவில் பாதிக்கின்றது.
நீரிழிவால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு தோலுக்கு முழுமையாக ரத்தம் பாய்வதில்லை. இதனால் தோல்களின் உணர்வுத்திறன் இதனால் குறைகிறது. அடிக்கடி புண்கள் ஏற்படுவதோடு அவை ஆழமாக போய், ஆறுவதற்கு தாமதமாகும். இந்த புண்களில் பாக்டீரியாவும், தொற்றுநோய்களும் பரவுவதால் சருமம் பாதிக்கப்படுகிறது.
 படர் தாமரை
பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும் இந்த ‘அரிப்பு’ கோடை காலத்தில் அதிகமாக தாக்கும். பிறப்புறுப்பில் ஆரம்பித்து தொடை இடுக்குகளில் பரவும் இந்த சொறி, சினைப்புகள் சிவந்திருக்கும். வேதனையான இந்த அரிப்பு வியாதி பல தடவை உண்டாகும்.
நீரிழிவு நோயாளிகளின் பிறப்புறுப்புகளை ஈஸ்ட் தாக்குவது சர்வ சாதாரணமாகும். அரிப்புக்கு இந்த தொற்று நோய் காரணம். பெண்களுக்கு அரிப்பு, நமைச்சலுடன், வெள்ளைபடுவதும் அதிகமாகும். பல்வேறு பாதிப்புகளை இந்த பூஞ்சைத் தொற்று ஏற்படுத்தும்.
 தலை படர் தாமரை
தலையில் அரிப்பை ஏற்படுத்தும். இதனால் தலைமுடி பாதிக்கப்பட்டு சிவப்பு படர்தாமரை வளையங்கள் தோன்றி நமைச்சல் அதிகரிக்கும்.
 உடல் படர்தாமரை
உடலில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படும் இந்த படர்தாமரை ட்ரைகோபைடன், மைக்ரோஸ்போரம், எபிடெர்மோபையன் இவைகளால் ஏற்படும்.
 வாய்ப்புண்கள்
நீரிழிவு உள்ள சிறுவர்களை அடிக்கடி வாய்ப்புண்கள் தாக்கும். இது சர்க்கரை வியாதியின் பாதிப்பு என்றே கருதப்படுகிறது.
 அடிவயிறு கறுப்பாகும்
மரு, பாலுண்ணிகளினால் கழுத்தின் பின்புறம், அக்குள், மார்புகளின் கீழே, அடிவயிறு பகுதிகளில் உண்டாகும். பருமன் அதிகமுள்ளவர்களை அதிகம் பாதிக்கும். தோல் மடிப்புகள் தடித்து கறுத்து விடும். நீரிழிவு வரும் முன்பே இந்த தோல் வியாதி தோன்றும். இந்த சரும வியாதி இன்சுலின் எதிர்ப்பினால் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 நக படர்தாமரை
பாக்டீரியா தாக்குதல் நகத்தில் ஏற்படும் சிதைவு. கால் நகங்களில், கை நகங்களை விட அதிகம் வரும். நகம் சதையை விட்டு பிரிந்து, சிதைந்து விடும். அவ்வப்போது கால்களை கவனித்து நகங்களை வெட்டிவிட வேண்டும்.
 டினியா பெடிஸ்
வேனிற்காலத்தில் அதிகமாக வரும் தோல் அரிப்பு நோய்களில் இதுவும் ஒன்றாகும். ஒருவருக்கொருவர் தொற்றிக் கொள்ளும் சரும வியாதி, இந்த நுண்ணுயிர்களுக்கு பிடித்த ஈரமான இடம் கால் விரல்களின் இடுக்கு. இது முதலில் சிறு பகுதியாக தாக்கி பாதம் முழுவதும் புண்ணாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது பாக்டீரியா தொற்றாகவும் மாறலாம்.
 கால்களில் கொப்புளங்கள்
நீரிழிவு உள்ள நோயாளிகளுக்கு திடீரென்று கொப்புளங்கள் தோன்றலாம். இவை கை, கால்கள், விரல்கள், பாதம் போன்ற பகுதிகளில் தோன்றும் இவை வலியில்லாதவை, தானாகவே மறையும். இவை அபூர்வமான டயாபடிக் பாதிப்புகள்.
 வறுத்த உணவுகள் தவிர்க்கலாம்
தோல் நோய் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் நெல்லிக்காய் சாப்பிடலாம். பருத்தி உள்ளாடைகளை அணியவும். கால்களை பராமரிக்கும் முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
 சருமநோய்கள்
புண்கள், காயங்கள் போன்றவர்க்கு மருந்துகடைகளில் வாங்கி உபயோகிக்கக்கூடாது. மருத்தவரின் ஆலோசனையை கேட்கலாம். வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்க்கவும்.
 மருந்தாகும் துளசி மஞ்சள்
தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேப்ப மர இலை, ஆலமரபட்டை, துளசி, மஞ்சள் இவற்றின் பொடிகளை குளிக்கும் நீரில் கரைத்து குளிக்கலாம். இல்லை பாதிக்கப்பட்ட இடங்களை கழுவலாம். காயங்களை ஆற்ற, கற்றாழை, மஞ்சள் கலந்த ஆயுர்வேத களிம்புகளை பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot