அல்லாஹ் - அளவற்ற அருளாளன்! - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

18 செப்டம்பர், 2011

அல்லாஹ் - அளவற்ற அருளாளன்!


MUST READ 
சிந்தித்துப்பாருங்கள்!
எதற்கும் சக்தியற்றுஉழைக்க வசதியற்ற வக்கற்றவர்களாக பிறந்தீர்கள்!
வாழ்க்கையைக் கொடுத்தான்வசதிவாய்ப்புகளைக் கொடுத்தான்.
தாயைக் கொடுத்தான்தாரத்தை கொடுத்தான்.
பிள்ளைச் செல்வத்தை கொடுத்தான்.
உங்களை நேர்வழிப்படுத்த அருள்மறைக் குர்ஆனையும்
நல்வழிப்படுத்த அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளான ஹதீதுகளையும் உங்களிடம் கூலியை எதிர்பார்க்காமல் இலவசமாக அருளினானே
இந்த அன்பிற்கு நிகராக வேறு ஏதாவது அன்பு உள்ளதா?
இந்த அருளுக்கு நிகரான அருள் உலகில் ஏதாவது உள்ளதாசிந்தித்துப்பாருங்கள்.]
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
அல்லாஹ் அளவற்ற அருளாளன்!
அன்புச் சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,
இங்கு அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் என்று புகழப்பட்டுள்ளது அதற்குப் பொருள் என்ன என்றைக்காவது சிந்தித்ததுண்டாஅல்லாஹ்வின் அருளுக்கு அளவுகோல் உள்ளதாஎன்று சிந்தித்துப்பாருங்கள்!
உங்கள் தாயின் கர்ப்பக்கோளரையில் பார்ப்பதற்கே அறுவருப்பான சதைப் பிண்டமாக நீங்கள் இருந்தீர்கள் உங்களளுக்கு உருவம் கொடுத்து அருளினான்!
o உங்களுக்கு அழகான பொம்மையைப் போன்று உருவம் கொடுத்தால் மட்டும் போதுமா என்று எண்ணி உங்களுக்கு உணர்வையும் கொடுத்தான்!
உணர்வு மட்டும் போதுமா என்று எண்ணி உணர்வை வெளிப்படுத்தும் ஆற்றலையும் கொடுத்தான்.
குறிப்பிட்ட மாதங்கள் தாயின் வயிற்றில் தங்க வைத்து உணவையும் கொடுத்தான்!
தாயின் சுவாசக்காற்றுடன் உங்களுக்கும் சற்று சுவாசக் காற்றை சிரமமின்றி கொடுத்தான்!
மூச்சுவிடக்கூட முடியாத கப்ரு போன்ற அந்த கற்பக் கோளரையில் அழகான நித்திரை கொடுத்தான்!
இறுதியாக முழு வடிவம் கொடுத்து உங்களை குழந்தையாக பிறக்க வைத்தான்!
குழந்தை பிறந்ததும் தாயின் மடியில் தவழ்வதற்காக அவளிடம் அன்பைக் கொடுத்தான் தந்தையிடம் பாசத்தை கொடுத்தான்!
அன்பு செலுத்த பெற்ற தாய் தந்தை மட்டும் போதுமாஎன்று எண்ணி உற்றார் உறவினர்களின் உள்ளத்தில் மென்மையாக தொட்டுக்கொஞ்சும் கலையை கொடுத்தான்அனைவரும் உங்களை கொஞ்சி மகிழ்ந்தனர் நீங்களோ கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தீர்கள்!
அல்லாஹ் நிகரற்ற அன்புடையோன்
சகோதரர்களே இங்கு அல்லாஹ்வை நிகரற்ற அன்புடையோன் என்று புகழப்பட்டுள்ளது அதற்குப் பொருள் என்ன என்றைக்காவது சிந்தித்ததுண்டாவாருங்கள் சிந்திப்போம்!
அல்லாஹ்வின் அன்புக்கு அளவுகோல் உள்ளதாஎன்று சிந்தித்துப்பாருங்கள்!
சுவாசிக்கும் காற்றைக்கொடுத்து உதவினான்பருகும் நீரை கொடுத்து உதவினான்அமர்வதற்கு நிலத்தையும்ரசிப்பதற்கு இயற்கை எழில் கொஞ்சும் அழகையும் கொடுத்தான்இது நிகரற்ற அன்பில்லையா?
நிலத்தில் உணவுக்காக உழுகிறீர்கள் உங்கள் உழைப்புக்கு ஊதியமாக பயிரை வெளிப்படுத்துகிறான் சிந்தித்துப் பாருங்கள் நிலத்தில் பயிர் வெளிப்படாமல் இருந்தால் எதை உண்பீர்கள்இது நிகரற்ற அன்பில்லையா?
சுவாசிக்கும் காற்றின் உதவியுடன் விமானத்தில் பறக்கிறீர்கள்பருகும் நீரில் மீன் பிடித்து மகிழ்கிறீர்கள்நிலத்தில் உழுதும்வீடு கட்டியும்உங்கள் மலஜலங்களை சுத்தப்படுத்தியும் சுகம் காண்கிறீர்கள் இறுதியாக மரணித்து மண்ணரைக்கு செல்ல இடத்தையும் ஒதுக்கினான் இது நிகரற்ற அன்பில்லையா?
சிந்தித்துப்பாருங்கள்!
உங்கள் மலஜலங்களை மண் விழுங்காமலும் விழுங்கியதை மக்கச் செய்யாமலும் இறுதியாக உங்கள் மலஜலம் கெட்ட துர்நாற்றம் பிடித்து காற்றில் கலந்து பரவினால் இந்த உலகில் வாழ முடியுமா?இப்படிப்பட்ட இழிவான நிலைக்கு உங்களை அல்லாஹ் தள்ளிவிட்டானாஅல்லது உங்களை செம்மையாக்கி வாழ வழிவகை செய்தானா?
தாயின் வயிற்றில் இருக்கும் போது உங்கள் உடலில் இதயத்தை பொறுத்தியவன் எவன்?
நுரையீரைலையும்கல்லீரலையும் பொருத்தயவன் எவன்?
o பற்களையும் நாக்கையும் உதடுகளையும் பொறுத்தியன் எவன்?
மலஜலம் கழிக்க அந்தரங்க உறுப்புகளையும் அதன் அருகில் வீரியமிக்க விந்துத் துளிகளையும் பொறுத்தியவன் எவன்?
எலும்புகளையும் நரம்புகளையும் அவற்றை இயக்க சிந்திக்கும் மூளையையும் அதற்கென்று நரம்புகளையும்தோலையும் பொருத்தியன் எவன்?
துள்ளிக்குதிக்கும் நீரை உங்கள் முதுகுத்தண்டு வடப்பகுதியில் செம்மையாக்கியவன் எவன்?
முகவரியற்ற உங்களுக்கு முகவரியைக் கொடுத்து உதவியவன் எவன்இதன் மூலம் உலகில் வாழவழிவகை செய்து உங்களுக்கு உங்கள் மனைவியை கொடுத்து அவளின் மூலம் கட்டுக்கடங்காத மிருகத்தனமான உங்கள் உடல் சுகத்தை தனிப்பவன் எவன்?
ஓ மாண்புமிகு மனிதர்களே!
உங்களில் நல்லோரும் உள்ளனர்உங்களில் தீயோரும் உள்ளனர் நல்லோர் படைத்த இறைவனின் அருளையும் அன்பையும் நினைத்து புகழ்ந்துக்கொண்டும் அஞ்சிக்கொண்டும்தீயோர் படைத்த இறைவனின் அன்பையும் அருளையும் மறந்து தங்கள் நாதாக்களையும்மரணித்த மனிதர்களிடம் உதவி தேடியும் அலைகின்றனர்.
உங்கள் நாதாக்களும் அவ்லியாக்களும் எதைப் படைத்தனர் என்பதை பட்டியல் போட்டு காட்ட முடியுமா? அற்பமான ஒரு ஈ-யின் இறக்கையைக்கூட அவர்களால் உருவாக்க முடியுமாஅல்லது அந்த ஈ-யிடும் முட்டையின் ஓட்டைக் கூட உருவாக்க முடியுமா?
உங்களில் வசதிபடைத்தோர் ஏழைகளை உதாசீனப்படுத்துகிறீர்கள் வலிமையான ஆற்றல் படைத்தோர் வலிமைற்ற மனிதர்களை அடக்குமுறைகளால் அடக்கிக்கொண்டும் வாழ்கிறிர்கள்பெற்ற தாய் தந்தையரை வயதான காலத்தில் துரத்துகிறீர்கள்கட்டிய மனைவியை காசுக்காக மிதிக்கிறீர்கள்பெற்ற பிள்ளைகளை முறையாக பேணாமல் அநாதைகளைப் போன்று அங்கும் இங்கும் அலைய விடுகிறீர்கள் இந்த பாவங்களையெல்லாம் செய்துக் முஸ்லிமாகிய நான் சுவனம் போகவேண்டும் என்று எண்ணினால் உங்கள் ஆசை நிறைவேறுமா?
மஹ்ஷரில் அல்லாஹ்வின் கேள்விக்கணைகளிலிருந்து உங்களால் தப்பித்து ஓடிவிட முடியுமா?வாதத்திறமையால் தவறான வழியில் அடைந்த சொத்து சுகங்கள் பயனளிக்குமா?
எதற்கும் சக்தியற்றுஉழைக்க வசதியற்ற வக்கற்றவர்களாக பிறந்தீர்கள்! வாழ்க்கையைக் கொடுத்தான்!வசதிவாய்ப்புகளைக் கொடுத்தான் தாயைக் கொடுத்தான்தாரத்தை கொடுத்தான் பிள்ளைச் செல்வத்தை கொடுத்தான்உங்களை நேர்வழிப்படுத்த அருள்மறைக் குர்ஆனையும் நல்வழிப்படுத்த அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளான ஹதீதுகளையும் உங்களிடம் கூலியை எதிர்பார்க்காமல் இலவசமாக அருளினானே இந்த அன்பிற்கு நிகராக வேறு ஏதாவது அன்பு உள்ளதா?
இந்த அருளுக்கு நிகரான அருள் உலகில் ஏதாவது உள்ளதாசிந்தித்துப்பாருங்கள் இனியாவது அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் உணர்ந்து அவனுக்கு அஞ்சிவாழும் மூமின்களாக மாற முயற்சி செய்யுங்கள்உங்கள் மீது அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!
''Jazaakallaahu khairan''
இக்கட்டுரையாசிரியருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot