அல்லாஹ்விடம் ஒருநாள் என்பது மனிதர்கள் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகள்! - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

18 செப்டம்பர், 2011

அல்லாஹ்விடம் ஒருநாள் என்பது மனிதர்கள் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகள்!

''வனத்திலிருந்து பூமிவரையிலுமுள்ள காரியத்தை அவனே நிர்வகிக்கின்றான்நான் அவனிடமே மேலேறிச் செல்லும் அதன் அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்'' (அல் குர்ஆன்-32:5).
இந்த உலகில் மனிதன் வாழும் காலகட்டங்கள் இன்று கணக்கிட்டு அனுபவிக்கக் கூடிய கணக்குப்படி இருக்கிறதுஅதாவது பூமி தன்னைத் தானே சுற்றி வருவதை ஒரு நாள் என்று மனிதன் கணக்கிட்டுக் கொண்டான்பூமியின் இந்த இயக்கம் மனிதனின் பலவீனத்திற்கேற்ப இறைவனால் தீர்மானிக்கப்பட்டதாகும்அவனது உழைப்பிற்கும்ஓய்விற்கும் ஏற்ற இயக்கமாகும் இது.
மனிதன் உழைப்பதற்காகப் பகலையும்அவன் ஓய்வு பெறுவதற்காக இரவையும் ஏற்படுத்தியுள்ளதாக இறைவன் தன் திருமறையில் (குர்ஆனில்பல இடங்களில் குறிப்பிடுகிறான்.
பூமியின் இந்த இயக்கம் மொத்த பிரபஞ்சத்துடைய இயக்கமல்லபூமியை தவிர்த்து இதர கோள்கள் மற்றும் பிரபஞ்சத்துடைய நகர்வு எதுவும் பூமி இயங்கும் வேகத்தில் இயங்கக் கூடியதல்லஇதைவிட வேகமாகவோ மெதுவாகவோதான் சுழல்கின்றனமனிதன் வகுத்துள்ள நாள்மாதம்வருடம் என்பது இந்த பூமிக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும்.
பூமியின் இந்த சுழற்சிவருடங்களோடு மனிதனின் வயதையும் தீர்மானிக்கிறதுஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பதை உணர்த்துவது பூமியின் இயக்கம்தான்.
இந்தப் பூமியில் வாழத்துவங்கிய மனிதன்ஆரம்பகாலத்தில் நீண்ட காலம் வாழத்துவங்கி பல்வேறு காரணங்களால் மனிதனின் வயது சுருங்கி இன்று சராசரியாக அறுபதுஎழுபது ஆண்டுகள் வாழ்ந்தாலும்அவனது ஆணவமும்திமிர்தனமும் மட்டும் குறையவேயில்லைஇதற்குக் காரணம் வாழ்வின்மீது அவனுக்குள்ள போராசைதான்.
இந்தப் பேராசையை இடித்துரைக்கும் விதமாகப் பேசும் வசனங்களில் ஒன்று மேற்குறிப்பிட்ட வசனத்தை ஒத்தே அமைந்துள்ளது. ''வேதனையை அவர்கள் அவசரமாகத் தேடுகிறார்கள்அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லைமேலும் உம்முடைய இறைவனிடம் ஒருநாள் என்பது நீங்கள் கணக்கிடுகின்றன ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.'' (அல் குர்ஆன்ஸூராஅல்ஹஜ் - 22:47)
இறைவனின் வேதனையைப் பற்றி மனிதனிடம் எச்சரிக்கப்படும் போது நான் இவ்வளவு காலம் வாழ்கிறேன்ஏன் இறைவனின் தண்டனை வரவில்லை என்று அவன் கேட்கிறான்மனிதனைப் பொறுத்தவரை அவனுக்கு இந்த வாழ்க்கை நீண்டதாகத் தெரியலாம்இறைவனின் பார்வையில் இது ஒன்றுமே இல்லாததுஅதிகபட்சமாக நீங்கள் ஆயிரம் ஆண்டுகளைக் கணக்கிட்டால் அல்லது வாழ்ந்தால் அதையே இறைவன் ஒரு நாள் என்றுதான் எடுத்துக் கொள்கிறான்ஆயிரம் ஆண்டு வாழ்க்கையையே ஒருநாள் வாழ்க்கை என்று தீர்மாணிக்கப்பட்டால் அறுபதுஎழுபது வருட வாழ்வின் நிலை என்னஒரு சிலமணி நேர வாழ்க்கையே ஆகும்.
''பூமியின் இயக்கத்தால் கணக்கிடப்படக்கூடிய ஆண்டுகளை மனிதன் கருத்தில் எடுத்துக் கொண்டு இருமாப்பு கொள்வதால்நீ பூமியில் ஒரு சில மணி நேரம்தான் வாழ்ந்தாய் என்று மனிதனிடம் கூறினால்இவனால் ஏற்றக்கொள்ள முடியவில்லைமரணத்திற்குப் பிறகுள்ள மறுமை நாள் விசாரணையில் இந்த பூமியின் சுழற்சி இருக்கிறதுஇந்த கணக்கீடு அன்றைய தினம் செல்லாக்காசாகி விடும்அன்றைக்கு மனிதனால் இந்த பூமி வாழ்க்கையைக் கணக்கிட்டுக்கொள்ள முடியும். 'அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில் தாங்கள் பகலில் சொர்ப்ப காலமே அவ்வுலகில் தங்கி இருந்ததாக(விளங்கிக்கொள்வார்கள்)" (அல் குர்ஆன்ஸூராயூனுஸ் - 10:45).
மறுமையில் மனிதர்கள் அனுபவிக்கும் பகல் பொழுதோ அல்லது இரவுப் பொழுதோ அல்லது இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஒரு பொழுதோ இந்த பூமியுடைய பொழுதுகளோடு கொஞ்சம்கூட ஒத்திருக்காதுஅங்கு நடக்கும் நிகழ்வுகளும்விசாரனைகளும் மிக நீண்ட நெடிய பொழுதுகளைக் கொண்டதாக இருக்கும்அங்கு நடக்கும்அதாவது இறைவனை நோக்கிச் செல்லும் விசாரனை ஒரு நாளைக் கடப்பது பூமி இயக்கத்தின் ஆயிரம் வருடங்களுக்கு ஒப்பானதாகும்அல் குர்ஆன் 32:5 வது வசனத்தில் இடம்பெறும் ''அவனிடம் மேலேறிச் செல்லும் கால அளவு'' என்பது மறுமைப் பொழுதைக் குறிப்பதாகவே விளங்க முடிகிறது. (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)
இக்கட்டுரையாசிரியருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot