கலாச்சாரங்களுக்கிடையில் ஓர் முஸ்லிம் பெண்! - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

11 செப்டம்பர், 2011

கலாச்சாரங்களுக்கிடையில் ஓர் முஸ்லிம் பெண்!


ஒவ்வொரு இஸ்லாமிய இணையத்திலும் இடம்பெற வேண்டிய மிக முக்கியமான கட்டுரை. MUST READ
[ உலகில் இஸ்லாத்தைத் தவிர வேறு எந்தக் கலாச்சாரமும் பெண்களுக்குரிய உரிமைகளையும், கண்ணியத்தையும் அளித்ததாகச் சரித்திரம் இல்லை. உயர்வான இந்த மார்க்கத்தில் இருக்கும் பெண்கள் உண்மையில் பெரும் பாக்கியவான்கள். இவர்கள் இந்தக் கொள்கையில் நிலைத்து நிற்கும் பண்பை இழந்துவிடுவார்களானால் அது இவர்களை மட்டும் பாதிப்பதாக அமையாது. நாளை வரவிருக்கும் இவர்களின் சந்ததியினர் அனைவரையும் பாதிக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இஸ்லாமிய கொள்கை மற்றும் கலாச்சாரத்தை அறியாத முஸ்லிம் பெண்கள். இவர்களின் இந்த போலித்தனமான சித்தாந்தத்திற்குள் சிக்கிச் சிக்கிச் சீரழிகின்றனர். இவர்களுக்கு நடுவில் வாழும் இறைநம்பிக்கையுள்ள முஸ்லிம் பெண், தன்கொள்கையில் உறுதி உள்ளவள் என்றால், அவள் தன் வாழ்க்கையை திருக்குர்ஆன் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்த அவர்களின் மனைவிமார் மற்றும் நபித்தோழர்களின் மனைவிமார்கள் வாழ்ந்து காட்டிய விதத்தில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்.
இன்றைய முஸ்லிம் பெண்களிடத்தில் எம்மதமும் சம்மதம் எனும் சித்தாந்தம் செயல்வடிவம் பெற்று வருகிறது. சில இடங்களில் முஸ்லிம் பெண்கள் கோவில்களும் சென்று வருகிறார்கள். நேர்ச்சை என்ற பெயரில் மாரியம்மன், காளியம்மன் தீச்சட்டி விழாக்களில் ஆடிவருபவர்களுக்கு மாலைகள் அணிவிப்பதும், எண்ணெய் வாங்கி ஊற்றுவதும் வழக்கமாகக் காணப்படுகின்றன. பிறமதக் கடவுளர்களுக்கும் சக்தி உண்டு என எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டை பல காலங்களாக முஸ்லிம்களில் சிலரும் சேர்ந்து உரைத்ததால் வந்த வினைகள்தாம் இவை என்பது கவனிக்கத் தக்கது.]
 கலாச்சாரங்களுக்கிடையில் ஓர் முஸ்லிம் பெண் (உம்மத்) .
;இறைவனை மட்டுமே ஏற்றுக் கொண்டு வாழும் ஒரு பெண் முஸ்லிம் பெண் எனப்படுகிறாள். அவள் தன் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அதை விட்டுக் கொடுக்கக்கலாகாது.
தற்போது நாம் காணும் உலகம் ஆடம்பரங்கள் நிறைந்ததாகவும், கலாச்சாரங்களைச் சீரழிக்கும் விதத்திலும் அமைந்துள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பெண்ணினம் உயிருடன் புதைக்கப்பட்டும், சிதையில் ஏற்றப்பட்டும் வதைக்கப்பட்டது. 1987 ல் இந்தியாவில் மான்சிங் என்பவர் இறந்துவிட்டதால் பச்சிளம் பெண்ணான ரூப்கன்வர் என்பவர் தன்னுடைய கணவனுடைய சிதையில் உயிருடன் ஏற்றப்பட்டால். அவள் துடிதுடித்து கருகிச் செத்ததை இந்தியமக்கள் நேரிலும், மீடியாக்கள் வாயிலாக செய்தியாகவும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
இச்சம்பவம் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திவிட்டது. நவநாகரீக காலத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டும் இவ்வாறு செய்கிறார்கள் என பலரும் வியப்படைந்தனர்; வேதனைப்பட்டனர். அனேகப் பெண்கள் இன்று உயிருடன் புதைக்கப்படாது, உடன் கட்டை ஏற்றப்படாது இருந்தாலும், அவர்களின் கண்ணியம் காக்கப்படாது இழிவான நிலையிலேயே நடத்தப்படுகிறார்கள். 'பெண்ணியம்" பேசுவோரும், மாதர் சங்கங்களும், நாங்கள் அனைத்தையும் விமர்சனம் செய்வோம் இதுவே எங்கள் கொள்கை என்று முழங்கும் நவீனத்துவ வாதிகளும் பெண்களை இழிவுபடுத்துவதில் கொஞ்சம் குறைவைத்திட வில்லை. மனித இனம் தன் மானத்தை மறைத்துக் கொள்வதற்காக ஆடைகளை விற்பனை செய்யும் ஜவுளிக்கடை பொம்மை முதல், மதுக்கடையின் வரைபடம் வரை பெண்களின் அரைநிர்வாணப் போஸைத்தான் காண்பிக்கின்றன.
உலகில் இஸ்லாத்தைத் தவிர வேறு எந்தக் கலாச்சாரம் பெண்களுக்குரிய உரிமைகளையும், கண்ணியத்தையும் அளித்ததாகச் சரித்திரம் இல்லை. உயர்வான இந்த மார்க்கத்தில் இருக்கும் பெண்கள் உண்மையில் பெரும் பாக்கியவான்கள். இவர்கள் இந்தக் கொள்கையில் நிலைத்து நிற்கும் பண்பை இழந்துவிடுவார்களானால் அது இவர்களை மட்டும் பாதிப்பதாக அமையாது. நாளை வரவிருக்கும் இவர்களின் சந்ததியினர் அனைவரையும் பாதிக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். படித்தவர்கள், அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படும் நவீன எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும், மீடியாக்களும் சீரிய கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் பெண்களை சந்திக்க இழுப்பதற்காக படாத பாடுபடுகின்றனர். உரிமைகள், நியாயங்கள் என்று போலித்தனமான கோஷங்கள் போட்டு பெண்களின் மனதைக் கவர்ந்து வருகின்றனர்.
இஸ்லாமிய கொள்கை மற்றும் கலாச்சாரத்தை அறியாத முஸ்லிம் பெண்கள். இவர்களின் இந்த போலித்தனமான சித்தாந்தத்திற்குள் சிக்கிச் சிக்கிச் சீரழிகின்றனர். இவர்களுக்கு நடுவில் வாழும் இறைநம்பிக்கையுள்ள முஸ்லிம் பெண், தன்கொள்கையில் உறுதி உள்ளவள் என்றால், அவள் தன் வாழ்க்கையை திருக்குர்ஆன் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்த அவர்களின் மனைவிமார் மற்றும் நபித்தோழர்களின் மனைவிமார்கள் வாழ்ந்து காட்டிய விதத்தில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும். இஸ்லாமியக் கொள்கை மற்றும் கலாச்சாரம் எதிலும் அனுசரித்துக் கொள்ளுதல் என்ற நிலை அவளிடம் இருக்கவே கூடாது. கொள்கைக்காக உயிரைத் தியாகம் செய்த அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா மற்றும் சுமைய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப் போன்று இன்றைய முஸ்லிம் பெண்களும் தங்கள் உயிரைத் தியாகம் செய்வதிலும் தயங்கக் கூடாது.
இன்றைய முஸ்லிம் பெண்களிடத்தில் எம்மதமும் சம்மதம் எனும் சித்தாந்தம் செயல்வடிவம் பெற்று வருகிறது. சில இடங்களில் முஸ்லிம் பெண்கள் கோவில்களும் சென்று வருகிறார்கள். நேர்ச்சை என்ற பெயரில் மாரியம்மன், காளியம்மன் தீச்சட்டி விழாக்களில் ஆடிவருபவர்களுக்கு மாலைகள் அணிவிப்பதும், எண்ணெய் வாங்கி ஊற்றுவதும் வழக்கமாகக் காணப்படுகின்றன. பிறமதக் கடவுளர்களுக்கும் சக்தி உண்டு என எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டை பல காலங்களாக முஸ்லிம்களில் சிலரும் சேர்ந்து உரைத்ததால் வந்த வினைகள்தாம் இவை என்பது கவனிக்கத் தக்கது.
ஒரு சாரார், கல்விக்கு, செல்வத்திற்கு, குழந்தை வரம் தருவதற்கு, வீரத்திற்கு இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்திக் கொண்டு இறைவனை விளையாட்டுப் பொருளாகவும், வேடிக்கை நாயகனாவும் ஆக்கிவிட்டனர். இவர்களின் கடவுளர்கள் எண்ணிக்கையற்றுக் காணப்படுகின்றனர்.
இன்னொரு சாரார் கடவுளுக்கு மனைவி மற்றும் பிள்ளைகளைக் கற்பித்து பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என கடவுளை மூன்றாகத் துண்டாடி விட்டார்கள்.
இன்னொரு சாரார் கடவுள் எனும் இறைவன் ஒருவன் மட்டுமே அவனுக்கு நிகராக எதுவும் கிடையாது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிவருகின்றனர்.
எம்மதமும் சம்மதம் எனக் கூச்சலிடும் இவர்கள் மேற்குறிப்பிட்ட மூன்று மதங்களில் எதை மெய்யெனக் கருதுகிறார்கள்?
மூன்றுமே மெய்யான இறைமார்க்கம் என்கிறார்களா? அல்லது இல்லை இல்லை மூன்றுமே பொய்யானது எனக் கூறவருகிறார்களா?
மூன்றுமே பொய்யென்றால் மறுபேச்சிற்கு இடமில்லை. மூன்றுமே மெய்யான மதங்கள்தான் என்றால் அது எந்தவகையில் சரியாக இருக்கிறது? இவர்கள் இதை விளக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
உதாரணம் ஒன்று இணைக்க!
''அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவனுக்கு சுவர்க்கத்தை அல்லாஹ் ஹராமா(க ஆக்கி வில)க்கிவிட்டான். மேலும், அவன் ஒதுங்கும் இடம் நரகமே ஆகும். அக்கிரமக்காரர்களுக்கு உதவி புரிபவர் எவருமில்லை.'' (அல்குர்ஆன் 5:72)
''அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும் வஹி முலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், நீவிர் (இறைவனுக்கு இனைவைத்தால் உம் நன்மைகள் (யாவும்) அழிந்து நஷ்டமடைபவர்களாம் விடுவீர்கள் (என்பதேயாகும்) (39:65)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் சொர்க்கவாசி என்று அறிவித்துள்ளான். அவர்களே இறைவனுக்கு இனை வைத்தால் நன்மைகள் யாவும் அழிந்து விடும் என்று இறைவன் கூறுகிறானே, நம்முடைய நிலைமையை எண்ணி பார்கின்றோமா. இன்றைக்கு நாம் இனை வைப்பது மாற்று மத கோயில்களுக்கு சென்று வருவது தான் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். இது தவறு அல்லாஹ்வை தவிர மற்ற எந்த பொருளை வணங்கினாலும் அது இணை தான் (ஷிர்க்).
இன்னும் அல்லாஹ் கூறுகிறான்.
நிச்சியமாக அல்லாஹ் தனக்கு இனை வைப்பதை மன்னிக்க மாட்டான். இதை தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் அல்லாவுக்கு இனை வைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்குர்ஆன் 4:48)
இன்று நாம் என்ன நினைக்கிறோம். அல்லாஹ்வை முன்னிருத்தி அவுலியாக்களிடம் கேட்கிறோம். நாங்கள் தொழவதில்லை, நோன்பு நோற்பது இல்லை. ஹஜ் செய்வது இல்லை. அதனால் நாங்கள் கேட்டால் இறைவன் கொடுக்கமாட்டான். அதனால் நாங்கள் அவுலியாக்களிடம் கேட்டு அல்லாஹ்விடம் பெறுகிறோம் என்று கூறிவருகின்றேமே! இடைதரகர் இல்லாத மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம். நான் தொழுவது இல்லை, நோன்பு வைப்பது இல்லை, ஸக்காத் கடமையை செய்வது இல்லை, ஹஜ் செய்வது இல்லை என்று கூறுபவர்கள் முதலில் முமீன்கள் அல்ல. இஸ்லாம் வருவதற்கு முன்பு மக்காவில் வாழ்ந்து வந்த மக்கள் இந்த பூமியை படைத்தது யார் என்று கூறுவார்கள். இந்த வானத்தை படைத்தது யார் என்று கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அந் நிலையில் இருக்கும் போது அல்லாஹ் ஏன் நம் இறை தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை துதராக ஏற்படுத்தினான் என்பதை சிந்தித்து பாருங்கள்.
உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? உங்கள் பார்வைகளின் மீதும் சக்தியுடைவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துப்பவன் யார்? (அகிலங்களில் அனைத்து காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துப்பவன் யார்? என்று (நபியே!) நீர் கேளும் உடனே அவர்கள் அல்லாஹ் என்று பதில் அளிப்பார்கள். அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா என்று நீர் கேட்பீராக. (அல்குர்ஆன்: 10:31)
இன்றும் பல, பல வசனங்களில் அல்லாஹ்வின் மீது மட்டும் நம்பிக்கைவையுங்கள் என்று அல்லாஹ் தன் அருள் மறையாம் திருமறையில் கூறுகிறான். இதை நாம் சிந்தித்து பார்ப்பது கிடையாது. இன்னும் சாம் இறைவனின் இலக்கணம் என்ன இறைவனின் தன்மைகள் என்ன, இறைவன் நம் மீது எவ்வளவு இரக்கம் காட்டுகிறான் என்பதை நாம் அறியாமலேயே இருக்கின்றோம்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து நின்று (குத்பாவில்) ஐந்து விஷயங்களை கூறினார். நிச்சயமாக அல்லாஹ் உறங்குவதில்லை என்றும், உறங்குவது அவனுக்கு தகாது என்றும், நீதியை அவனே நிலை நிறுத்துகிறான் என்றும் அதாவது ஒவ்வொருவரின் உணவையும் அவனே குறைக்கவும் பெருக்கவும் செய்கிறான் என்றும், பகலில் செய்யப்படும் வேலைகளை இரவு படுப்பதற்கு முன்னரும், இரவில் செய்யப்படும் செயல்களைப் பகல் புலர்வதற்கு முன்னரும், அவனிடமே (வானவர்கள் மூலம்) எடுத்துச் செல்லப்படுகின்றன என்றும், அவனுக்குரிய திரை, ஒளி என்றும், அதனை அவன் நீக்கினால் அவனுடைய பேரொளி எது வரை செல்கின்றதோ அது வரை உள்ள படைப்புகள் அனைத்தும் எரிந்துவிடும் என்றும் அவர்கள் எடுத்துரைத்தனர். (அறிவிப்பவர்: அபூ மூஸா ரளியல்லாஹு அன்ஹு, இஷா, நூல்: முஸ்லிம்)
ஆனால் நாம் எவ்வாறு இறைவனின் இலக்கணத்தை புரிந்து வைத்திருக்கிறோம் என்றால் நாம் நேரடியாக கேட்டால் இறைவன் கொடுக்கமாட்டான். அதனால் இடைத்தரகரான அவுலியாக்களிடம் நாம் கேட்டால் கொடுப்பார்கள் என்று புரிந்து வைத்திருக்கிறோம். நாம் அல்லாஹ்விடம் கேட்டால் எந்த அளவுக்கு சந்தோசப்படுவார்கள் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஹதீஸ் மூலமாக விளக்குகிறார்.
ஒரு மனிதன் பாலைவனத்தில் தனக்கு வேண்டிய உணவு, நீர் உடை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு பிராயணம் செய்கிறான். பிராயணம் செய்யும் போது சற்று ஒய்வு எடுப்பதற்காக உறங்குகிறான். உறங்கி எழுந்தவுடன் பார்க்கும் போது அவன் பிராயணம் செய்த ஒட்டகம் காணமல் போய் விடுகிறது. உடனே அவன் இத்துடன் என்னுடைய உயிர் பிரியப்போகிறது என்று நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்கிறான். ஏனென்றால் பாலைவனத்தில் நாம் நடக்கமுடியாது இன்னும் அங்கு உணவு நீர் எதுவுமே கிடைக்காது. நாம் கொண்டு வந்த உணவு, நீர் எல்லாம் ஒட்டகத்தில் சென்று விட்டது. ஆதலால், நாம் இனி உயிர் வாழ முடியாது என்று மிகவும் வேதனையாக அமர்ந்து கொண்டிருக்கும் பொழுது காணமல் போன ஒட்டகம் திரும்பி வருகிறது அப்பொழுது அவன் ஒட்டகம் கிடைத்த சந்தோசத்திற்கு இறைவனிடம், இறைவா நீ எனக்கு அடிமை நான் உனக்கு எசமான் என்று கூறுகிறான் சந்தோசத்தில் நாம் எதை பேசுகிறோம் என்றே தெரியாது அல்லவா அதைபோல், நாம் இறைவனிடம் பிராத்தனை செய்தால் அல்லாஹ் அந்த அளவிற்கு சந்தோசப்படுகிறான்.
நாம் என்ன நினைக்கிறோம், நாம் கேட்டதை எல்லாம் இறைவன் கொடுக்கிறான் என்று பொறுமையை இழந்து விடுகின்றோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் நாம் கேட்ட துஆக்களை அல்லாஹ் மூன்று விதமாக அங்கீகரிக்கிறான்.
1. கேட்டதை எல்லாம் கொடுக்கிறான்.
2. கேட்டதை விட அதிகமாக கொடுக்கிறான்.
3. கேட்டதில் கெடுதல் இருந்தால் அதை தடுக்கிறான்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம் கேட்டதை எல்லாம் இறைவன் கொடுக்கவில்லையே என்று நினைத்து அவுலியாக்களிடம் செல்கிறோம், மற்ற மதத்தவர் எப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு கடவுள் என்று வைத்துள்ளார்களே அதே போல் நாம் ஒவ்வொன்றுக்கும் ஒரு அவுலியா என்று வைத்திருக்கிறோம், இங்கே உங்களுக்கு சமீபத்தில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியை நினைவு கூற கடமைபட்டுள்ளோன்.
ஏர்வாடியில் புத்தி சரியில்லாத பல பேர் தீக்கு பழியான சம்பவத்தை நாம் பத்திரிகையிலும், டி.வீ செய்தியிலும் நாம் பார்த்ததை யாரும் மறந்து விட முடியாது புத்தி சரியில்லாதவனுக்கு அல்லாஹ் கேள்வி கணக்கு இல்லை என்று கூறுகிறான். ஆனால் அப்படிப்பட்டவர் தீக்கிரையாகும் பொழுது அங்கே (ஏர்வாடியில்) அடங்கி இருப்பதாக, பலர் நோய்களை குணப்படுத்துவதாக, பல பைத்தியங்களை நேர்படுத்துவதாக நம்பியிருக்கும் நாம் அனைவரும் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும் அங்கே அடங்கி இருக்கும் பாவாக்கள் அவுலியாக்கள் யாரேனும் வந்து காப்பாற்றினார்களா? இன்றும் செய்தியில் அங்கே நான்கு, ஐந்து கபர்களிலே காணவில்லை என்று கூறுகிறார்களே இனியாவது நாம் சிந்தித்து பார்க்க வேண்டாமா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறக்கும் தருவாயில் தன்னுடைய மருமகன் அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களை கூப்பிட்டு இந்த மக்கா நகரத்தில் தரைமேல் உள்ள கப்ருகளை தகர்த்திவிட்டு வருமாறு கூறினார்கள்.
இன்னும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார், நான் இறந்த பிறகு என்னுடைய அடக்கஸ்தலத்தில் கப்ரை எழுப்பிவிடாதீர்கள் என்று கூறினார். உலகத்திற்கு இறுதி தூதராக வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே கபர் கட்ட கூடாது என்று கட்டளை இட்டு இருக்கிறார்களே இன்று நாம் யாரை யாரையோ அவுலியாக்கள் என்று கபுருக்கு போய் வணங்குகிறோமோ அல்லாஹ் நம்மை மன்னிப்பான. இன்னும் பெண்கள் நன்றாக சிந்திக்க வேண்டும் கபருகளுக்கு ஜியாரத் செய்யும் பெண்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்.
தன்னை இரத்தம் சிந்தவைத்து கல்லால் அடித்த நகர பெண்களை பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்களா இல்லை, அரபு சிங்கம் என போற்றப்படும் ஹம்ஸா (Hamza) ரளியல்லாஹு அன்ஹு அவர்களை ஹிந்த் என்ற பெண்மணியை பெருமானார் சபித்தார்களா இல்லை, பின் யாரை சபித்தார்கள் கப்ரை ஜியாரத் செய்யும் பெண்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சபித்தார்கள்.
ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கபர் ஸ்தானத்தின் வழியாக சென்று கொண்டிருக்கும் பொழுது ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை கூப்பிட்ட என் அருமை மகளே ஃபாத்திமாவே! நீ எங்கே சென்று விட்டு வந்தாய் என்று பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட பொழுது பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தந்தையே இவ்வழியாக ஒருவர் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்து விட்டு வருகிறேன் என்று ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா கூற அதுதானே பார்த்தேன் நீ மட்டும் கப்ரு ஸ்தானத்திற்கு வந்து இருந்தால் உன்னுடைய மூதாயையர்கள், சுவனத்தில் நுழையும் வரையில் நீ சுவனத்தில் நுழைய மாட்டாய் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்.
சுவனத்தின் தலைவி என்று அறிவிக்கப்பட்ட ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சகோதரிகளே சிந்தித்து பாருங்கள். இன்று நம் வீட்டில் தாத்தா, பாட்டி, அண்ணன் தம்பி, அப்பா, அம்மா, கணவன் இன்னும் உள்ள நம் உடன் பிறப்பு, நன்பர்கள் யாரவது இறந்தால் நாம் கப்ர் ஸ்தானத்திற்கு செல்கிறோமா. அப்படியிருக்க யார் என்றே தெரியாத, நல்லர்வர்கள், கெட்டவர்கள் என்றும் தெரியாதவர்களிடம் உதவி கேட்க செல்கிறோமே இது இணை இல்லையா? அல்லாஹ் இதை மன்னிப்பான.
இன்றும் அல்லாஹ் கூறுகிறான்.
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உன்னிடம் கேட்டால் நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிராத்தனை செய்பவனின் பிராத்தனைக்கு அவர் பிராத்தித்தால் விடையளிக்கிறோன். அவர்கள் என்னிடமே (பிராத்தித்துக் கேட்கட்டும். என்னையே நம்பட்டும் அப்பொழுது அவர்கள் நேர் வழியை அடைவார்கள் என்று கூறுவீராக. (அல்குர்ஆன்: 2:186)
நாம் அன்றாட செய்தித்தாள்களில் பார்க்கிறோம் சாமியார் பெண்களை கற்பழிப்பு, பாதிரியார் கன்னியாஸ்திரிகளை கற்பழிப்பு, மந்திரிப்பவர் பெண்களை ஏமாற்றி கற்பழிப்பு இப்படி பல செய்திகளை நாம் தினமும் படிக்கிறோம். ஆனாலும் நாம் பலவாராக ஏமாந்து செல்கிறோம். இன்னும் அல்லாஹ் கூறுகிறான். நீங்கள் மூஃமின்களாக இருந்தால் அல்லாஹ்விடம் தவக்கள் வையுங்கள் (அல்குர்ஆன்: 5 : 23)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு முறை சஹாப்பாக்களுடன் வந்து கொண்ருடிக்கும் போது ஒரு பெண் சுல்லிகளால் நெருப்பு எரிந்து கொண்டு தன் குழந்தையை மடியில் வைத்திருந்தான். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சஹாப்பாக்களை பார்த்து இந்த தாய் தன் குழந்தையை இந்த நெருப்பில் போடுவாளா என்று கேட்க அந்த சஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே எந்த தாயாவது தன் குழந்தை தீயில் போடுவாளா என்று கேட்டனர் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி தான் அல்லாஹ்வும் தன்னுடைய அடியார்களை நரகத்தில் தூக்கி போட கஷ்டப்படுவான் என்று கூறினார்.
நமக்கு யார் செய்த தொழுகையும் நமக்கு வராது நாம் செய்த நன்மை தீமைதான் நமக்கு வரும்.
ஒருவர் சுமையை ஒருவர் சுமக்கமாட்டார்கள். எந்த ஒரு ஆன்மாவும் அனுஅளவு நன்மை செய்தாலும் மறுமையில் அதற்குண்டான நன்மையை பெற்று தீரும் எந்த ஒரு ஆண்மாவும் அணு அளவு தீமை அது பெற்றே தீரும். இன்னும் மறைவான ஞானம் அல்லாஹ் ஒருவனுக்கே, இன்று பால் ம்தாபு, தாயத்து, கயிறு, தகடு எழுதி மாட்டுதல் என்று பல மார்கத்திற்கு முரணான செயல்களை நாம் செய்து கொண்டு வருகிறோமே நாம் நல்ல நேரம், கெட்ட நேரம் எந்த தொழில் செய்தால் நஷ்டம் என்று ஜோசியகாரனை நம்பி ஏமாறுகிறோமே நாம் சிந்தித்து பார்க்க வேண்டாமா. ஜோசியகாரன நம் தலை எழுத்தை நிர்ணிப்பவன்.
தாயத்து, கயிறுகளை கட்டுகிறேமே அதில் குர்ஆன் எழுத்துதானே இருக்கிறது அதனால் என்ன என்று கேட்கிறோமே குர்ஆன் எழுத்தை எழுதி கழுத்தில் தொங்க விட்டால் நன்றாக ஆகிவிடுமா. இன்று நாம் டாக்டரிடம் செல்லுகிறோம். அவர் மருந்து சீட்டை எழுதி கொடுக்கிறார். அதை நாம் பாக்கெட்டில் வைத்தால் நன்றாக நோய் போய்விடுமா அல்லது அதை கான்பித்து மருந்து சாப்பிட்டால் குணம் ஆகுமா. ஜோசியகாரன் இந்க தொழிலை செய்தால், லட்ச, லட்சமாக லாகம் வயரம் என்று கூறுவதை கேட்டு செய்கிறோமே, ஏன் ஜோசியகாரன் லட்ச, லட்சமாக சம்பாதிக்க என்ன வழி என்று அறிந்து செய்யலாமே நம்மிடம் 50, 100 க்கு கை ஏந்த வேண்டாமே. நன்றாக சிந்தித்து செயல் பட வேண்டும். ஏனென்றால் அல்லாஹ் தரும் மறுமை வாழ்கைதான் நிரந்தரம். அந்த மறுமையில் சொர்க்கம் கிடைக்க வேண்டும் என்றால் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அல்லாஹ்விடமே பிராத்தனை செய்ய வேணடும்.
அல்லாஹ்வின் படைப்பினங்களிடம் பிராத்தனை செய்யக் கூடாது. இன்னும் ஏகாத்துவம் பற்றி பல குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் சிறுக்கை பற்றி எடுத்து கூறுகின்றன. இந்த சிறுக்கிலிருந்து அல்லாஹ் எல்லோரையும் காப்பாற்றுவானாக.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள் ஒருவர் அல்லாஹ்வைதவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை என்று ஏற்றுக் கொள்கிறார். பிறகு அந்த நிலைலேயே அவர் மரணமடைகிறார் எனில் திண்ணமாக அவர் சுவனத்தில் நுழைவார். (அறிவிப்பவர்: அபூதர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம், முஸ்லிம்)

1 கருத்து:

  1. hey fucking islami?
    why no answer still?
    your father had many sex slaves as your mother?
    ok boy,how many u had?
    islam is ok religion but the followers made it bad. like control girls and don't even respect other religions. do you know day before yesterday in 2001 one motherfucking islam tarriest attacked and killed more than 6000 people in the name of islam

    பதிலளிநீக்கு

Post Top Ad

Your Ad Spot