மனிதனின் கேள்வியும் அல்லாஹ்வின் பதிலும் - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

29 ஜூலை, 2011

மனிதனின் கேள்வியும் அல்லாஹ்வின் பதிலும்


கேள்வி : அல்லாஹ்வின் சட்டங்கள் கஷ்டமானைவையா?
பதில் : அல்லாஹ் உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகின்றான். ஏனெனில் மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். (குர்ஆன் 4:28)
கேள்வி : குர்ஆனை மாற்ற நபிக்கு உரிமையுண்டா?
பதில் : இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டுவாரும். அல்லது இதை மாற்றிவிடும் என்று கூறுகிறார்கள். அதற்கு என் மனப்போக்கின் படி அதை நான் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை. என் மீது வஹியாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனைக்கு நான் நிச்சயமாக பயப்படுகிறேன் என்று (நபியே) நீர் கூறுவீராக. (குர்ஆன் 10:15)
கேள்வி : நபி ஏழையாகவே வாழ்ந்தாரா?
பதில் : அவன் உம்மை அனாதையாகக் கண்டு, அப்பால் புகலிடம் அளிக்கவில்லையா? இன்னும், உம்மை வழியற்றவராக் கண்டு அவன் நேர்வழியில் செலுத்தினான். மேலும் அவன் உம்மை தேவை உடையோராகக் கண்டு (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவனாக ஆக்கினான். (குர்ஆன் 93:6௮) (ஆரம்ப காலத்தில் இறங்கிய 11வது வஹி)
கேள்வி : வேறு தெய்வங்களை ஏசலாமா?
பதில் : அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள். (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல் வரம்பை மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். (குர்ஆன் 6:108)
கேள்வி : அல்லாஹ் எவருடன் நேரடியாக பேசுகிறான்?
பதில் : அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹியாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதை தன் அனுமதியின் மீது வஹியை அறிவிக்கக்கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை. (குர்ஆன் 42:51)
கேள்வி : எதை பலமாகப் பற்றிப் பிடிக்கும்படி நபிக்குக் கூறப்பட்டது?
பதில் : (நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர். (குர்ஆன் 43:43)
கேள்வி : குற்றவாளிகளுக்கு நரகம் கொஞ்ச காலத்திற்கா?
பதில் : நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது. (குர்ஆன் 43:74,75)
கேள்வி : அல்லாஹ் தூரத்தில் இருக்கின்றானா?
பதில் : (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.(குர்ஆன் 2:188)
கேள்வி : எதைப் பின்பற்ற வேண்டும்?
பதில் : (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
(குர்ஆன் 7:3)
கேள்வி : எல்லா நபிமார்களின் சரித்திரங்களையும் முஹம்மது நபியவர்களுக்கு அல்லாஹ் கூறியுள்ளானா?
பதில் : திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை; ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள். (குர்ஆன் 40:78)
கேள்வி : சூரியன், சந்திரனை வணங்கலாமா?
பதில் : இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் – இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள். (குர்ஆன் 41:37)
கேள்வி : திக்ர் என்பது எது?
பதில் : நிச்சயமாக, எவர்கள் நல்லுபதேசம் (குர்ஆன்) தம்மிடம் வந்த போது அதை நிராகரித்தார்களோ (அவர்கள் உண்மையை உணர்வார்கள்) ஏனெனில் அதுவே நிச்சயமாக மிகவும் கண்ணியமான வேதமாகும். (குர்ஆன் 41:41)
கேள்வி : நூஹு நபிக்கு போதிக்கப்பட்டது எது?
பதில் : நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; "நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்’ என்பதே – இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சமையாகத் தெரிகிறது – தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் – (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். (குர்ஆன் 42:13)
கேள்வி : தீமைகளை தேடிக்கொள்வது யார்?
பதில் : அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.(குர்ஆன் 42:30)
கேள்வி : நபி மறுமையில் என்ன கூறுவார்?
பதில் : "என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்" என்று (நம்) தூதர் கூறுவார். (குர்ஆன் 25:30)
கேள்வி : அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலர் உண்டா?
பதில் : இன்னும், நீங்கள் பூமியில் (எங்கு தஞ்சம் புகுந்தாலும்) அவனை இயலாமல் ஆக்குபவர்கள் இல்லை; மேலும், உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர, பாதுகாவலனோ, உதவிபுரிபவனோ இல்லை. (குர்ஆன் 42:31)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot