விபச்சார வழக்கு - நான்கு சாட்சிகள்!
மௌலானா ரிஜ்வான் பாஷா காதிரி
[ நபித்தோழர் ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து விபச்சாரம் நிகழ்ந்து விட்டதாக கூறினார். மூன்று தடவை நபிகளார் முகத்தை திருப்பிக் கொண்டார். ‘‘தவறு நடந்தால் அல்லாஹ்விடம் தனித்து பாவமன்னிப்பு கேள். இப்போது நீர் நபியை சாட்சியாக்கி விட்டீர். உமக்கு நிச்சயம் தண்டனை உண்டு.’’ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கினார்கள்.
இன்னொரு சம்பவம், பெண்மணி ஒருவர் நேரில் வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விபச்சாரக் குற்றத்தை ஒப்புக் கொண்டார். தண்டனை நிறைவேற்றப்பட்டது. சஹாபிகள் கிண்டலடித்து சிரித்தனர். தவறாக பெண்ணை ஏசிக் கொண்டிருந்தனர்.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "அந்தப் பெண்மணியின் தவ்பா பிரிக்கப்பட்டு மதீனாவாசிகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் அனைவருடைய அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டிருக்கும். உங்களை விட மேலான நிலையில் அந்தப் பெண்மணி அந்தஸ்து வகிக்கிறார். சுவனத்தை அவர் ஏற்கெனவே அடைந்துவிட்டார்" என்றார்கள்.இந்தியாவில் விபச்சார பிரச்னைக்கு ஒரே வழி, தவ்பா செய்ய வேண்டும். பாவம் புரிந்தவர் பிறரிடம் விவாதிக்க, கலந்து ஆலோசிக்க கூடாது.]
விபச்சார வழக்கு நான்கு சாட்சிகள்!
சூரா, அன்னிசா, மூன்றாவது ருகூஃ, வசனம் 15
விபச்சாரம் குற்றம் சாட்டுவோர், நான்கு சாட்சிகளை கொண்டுவர வேண்டும். அவ்வாறு சாட்சிகளை நிஜப்படுத்த தவறினால் 80 கசையடி வழங்கவேண்டும். வழக்கமாக இஸ்லாமிய நடைமுறை இரண்டு சாட்சிகள் போதும்.
ஆனால் விபச்சார வழக்கு, நான்கு சாட்சிகள் தேவை. பூரண சாட்சி இயல்புடன் முடிந்தால் வழக்கு தொடரலாம். இல்லையெனில், மகளிர் மீது தேவையற்ற அவதூறு கற்பிக்கக் கூடாது.
3:15 வசனம் ஆரம்பக்கட்ட விதி. தண்டனை, மரணம் வரும்வரை வீட்டில் கைது செய்து வைக்கவேண்டும். ஆயுள் தண்டனை. அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழியை உண்டாக்கும் வரை. அடுத்த வசனம், இருவருக்கும் தண்டனை. தவ்பா செய்தால் விட்டுவிடுங்கள். 3&16.
சூரா நூர் அத்தியாயம் 24, திருமணமானவருக்கு கல்லெறிதல், திருமணமாகாதவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் நூறு கசையடி தண்டனை. ஒரு உயிர் பறிக்கப்படலாம். ஆனால் அதனை மற்றவர் கண்ணுறுவதால் மகளிர் மானம் பாதுகாக்கப்படும். ஆண், பெண் சம தண்டனை. பாகுபாடு இல்லை.
இந்தியாவில் விபச்சார பிரச்னைக்கு ஒரே வழி, தவ்பா செய்ய வேண்டும். பாவம் புரிந்தவர் பிறரிடம் விவாதிக்க, கலந்து ஆலோசிக்க கூடாது.
நபித்தோழர் ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து விபச்சாரம் நிகழ்ந்து விட்டதாக கூறினார். மூன்று தடவை நபிகளார் முகத்தை திருப்பிக் கொண்டார். ‘‘தவறு நடந்தால் அல்லாஹ்விடம் தனித்து பாவமன்னிப்பு கேள். இப்போது நீர் நபியை சாட்சியாக்கி விட்டீர். உமக்கு நிச்சயம் தண்டனை உண்டு.’’ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கினார்கள்.
இன்னொரு சம்பவம், பெண்மணி ஒருவர் நேரில் வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விபச்சாரக் குற்றத்தை ஒப்புக் கொண்டார். தண்டனை நிறைவேற்றப்பட்டது. சஹாபிகள் கிண்டலடித்து சிரித்தனர். தவறாக பெண்ணை ஏசிக் கொண்டிருந்தனர்.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "அந்தப் பெண்மணியின் தவ்பா பிரிக்கப்பட்டு மதீனாவாசிகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் அனைவருடைய அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டிருக்கும். உங்களை விட மேலான நிலையில் அந்தப் பெண்மணி அந்தஸ்து வகிக்கிறார். சுவனத்தை அவர் ஏற்கெனவே அடைந்துவிட்டார்" என்றார்கள்.
மூஃமின்கள் பாவம் செய்தால் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவர்.
வசனம் 17, அல்லாஹ் மன்னிக்கிறான். மன்னிப்பு இறைவன் மீது கடமையாகிவிடுகிறது. எவ்வகையிலும் நிர்ப்பந்தமல்ல. இது அல்லாஹ்வின் ரஹ்மத்.
தவறு செய்தவர் மன்னிப்பு கேட்டால் இறைவன் நிச்சயம் மன்னிப்பான். மற்ற மனிதர்களை குறித்து இறைவனுக்கு கவலையில்லை. மனிதர்கள் பாவத்தை மன்னித்தாலும் சரியே மன்னிக்காவிட்டாலும் சரி.
‘‘இன்னல்லாஹ யுஹிப்பு தவ்வாபீன்’’ தவறுகளுக்கு பாவமன்னிப்பு கேட்பவரை இறைவன் மன்னிக்கிறான், அது மட்டுமல்ல. அல்லாஹ் நேசிக்கிறான்.
சூரா 25, ஃபுர்க்கான், வசனம் 70 பாவங்களை நன்மையாக மாற்றிவிடுவான்.
இறைவனின் அடிமை நம்பிக்கையிழக்கக் கூடாது. இஸ்லாம் நிராசை மதமல்ல. இறையருள் நம்பிகையூட்டும் மதம். பாவம் புரிந்தாலும் அல்லாஹ் தனது தர்பாருக்கு அழைக்கிறான். இறைவனின் பேரருள் விரிந்தது.
பெண்களிடம் தனித்து பேசக்கூடாது. ஆண்கள் உலகில் இல்லையா. ஏன் பெண்ணிடம் தனித்து சகவாசம். பேச்சு வார்த்தையில் ஆரம்பித்த உறவு எங்கெங்கோ எப்படியெப்படியோ சென்று முடிகிறது.
நான் ஒரு திருமண அழைப்பிதழ் பார்த்தேன். மணமகன் பெயர் முஸ்லிம். மண மகள் இந்து பெண்மணி. முஸ்லிம்களுக்கு தனியே நேரம், உணவு. இந்துக்களுக்கு தனி முகூர்த்த அழைப்பு.
மனிதன் தனது தவறை எளிதாக நோக்கும்போது, ஷைத்தான் மனிதனை வெகு தொலைவுக்கு அழைத்துச் சென்றுவிடுவான். வீழ்த்தி விடுவான்.
வசனம் 18, யார் பாவம் செய்து கொண்டேயிருந்து அதே நிலையில் மரணித்தால், மன்னிப்பு இல்லை. மரணம் வருவது ஒருவருக்கு தெரியாது. திடீரென்று வரும். மலக்கு வந்துவிட்ட பின்னர் பாவமன்னிப்பு கேட்டால் கிடைக்காது. வழங்கப்படமாட்டாது.
வசனம் 19, வேதனை தயார். சித்தப்படுத்தி வைத்துள்ளோம். செய்வோம். நரகவாதி கூக்குரலுக்கு அல்லாஹ் பதில் தருவான் & ‘‘ஏற்கெனவே உமக்கு முழு வாழ்க்கை வழங்கினேன்.’’
இறைநேசர்கள் உதாரணம் கூறுகின்றனர். ‘‘ஒரு வாலிபன் வீட்டை விட்டு ஓடி தலைமறைவாகினான். ஒரு நாள் மீண்டும் வந்து ஆஜரானான் தவ்பா செய்வது, மீள்வது அதைவிட இன்பம்.’’
இரண்டு வாழ்க்கை - அல்லாஹ்வின் முஹப்பத், அல்லாஹ்வின் விரோத வாழ்க்கை.
சூரா 67, முல்க், வசனம் 2, யார் நல்ல அமல்கள் செய்கிறார்கள். சோதிப்பதற்காகவே வாழ்க்கை.
குர்ஆனில் தவ்பா விளக்கம் மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. மனிதன் மீண்டும் பாவம் செய்கிறான். தவ்பா & திரும்புதல், மீளுதல், பாவமீட்சி பாவ மனிதன் இறைவனிடம் திரும்ப வேண்டும். அதுதான் தவ்பா.
அன்றைய அரபு சமூகத்தில் சொத்து பிரிப்பதை போலவே பெண்களை, மனைவிகளை, அம்மாக்களை பிரித்தனர். மூஃமின்கள் பெண்களை பலவந்தமாக எடுத்துக் கொள்வது ஹராம். இன்னுமொரு கெட்ட பழக்கம் அரபிகளிடம் நிலவியது. மனைவியை பிடிக்கவில்லையென்றால் தலாக் கூறமாட்டார்கள். சித்திரவதை செய்வர். வசனம் 19, ‘‘தடுத்து வைக்காதீர்கள்.’’
தலாக் கூறி விடுதலையளிப்பீர்.
‘‘மனைவியிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள்’’ வசனம் 19.
நல்லவர் அடையாளம், மனைவியிடம் நல்ல முறையில் நடப்பவராவர். மணப்பெண் தனது இல்லத்தை, உறவை தியாகம் செய்து புகுந்தவீடு வருகிறாள். கணவன் வீட்டு வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கக் கூடாது. முன்வந்து அவர்களாகவே செய்தால் யஹ்சான், பேருதவி.
நெருக்கமானவர்களிடம் சண்டையிடுவது சாதாரண விஷயம். என்றாவது பார்க்கும் நபரிடம் நமக்கு சண்டை வராது. சின்னஞ்சிறிய பிரச்னை விகாரம் தலாக்வரை போகக்கூடாது.
பொதுமக்கள் அதிகமாக தொலைக்காட்சி ரசிக்கின்றனர். பையன், மணமகள், தாய் குறித்த சாயல் இமேஜ் பதிந்துவிடுகிறது.
நடிகர், நடிகைகளுக்கு உடல் வளர்ப்பு, கவர்ச்சி தவிர வேறு வேலையில்லை. ஆனால் உடம்பை மட்டும் பார்த்து குடும்பம் நடத்த முடியாது. குறைகள் இருக்கலாம். மனைவி, கணவன் அல்லாஹ்வுக்கு அஞ்சக் கூடும். இதயத்தை பார்க்கவேண்டும்.
அல்லாஹ் ஜோடியை பார்த்து ஏற்படுத்துகிறான். நல்லவர்களுக்கு நல்லவர்கள், தீயவர்களுக்கு தீயவர்கள் ஜோடி கிடைப்பர்.
‘‘அத்தையிபாத்து லித்தையிபீன வத்தையிபூன லித்தையிபாத்’’
‘‘அல்கபீஷாத்து லில்கபிஷீன வலகமீஷ§ன லில்கபீஷாத்’’
இழிவான போக்கு கொண்டவர்களுக்கு உயர்ந்த குணவதி கிடைக்கமாட்டார்.
மணமகள் பார்க்கும் நேரத்தில் மணமகளை நடந்து வரச் சொல்வது இந்துக்களின் பழக்கம். இஸ்லாமிய பழக்கம் மீறப்படுகிறது.
ஐந்து நாட்கள் கழித்து பதில் தருவதாக கூறிவிடை பெறுகின்றனர். பெண் வீட்டாருக்கு இடி இடிப்பதை விட அதிர்ச்சி காத்திருக்கும்.
நபித்தோழர் பெண்ணை பார்க்கும்படி ஆலோசனை கூறப்பட்டது. நபிகளார் விளக்கமளித்தார். பெண்ணை பாருங்கள். முஹப்பத் அதிகமாகும். பெண் பார்ப்பது குற்றமல்ல.
வசனம் 19, நீங்கள் ஒன்றை வெறுக்கலாம். அதில் நன்மை இருக்கக் கூடும்.
பொருட் குவியலை மனைவிக்கு வழங்கியிருந்தாலும் அதில் எதனையும் வாபஸ் பெறக்கூடாது. திருமண புதிதில் வீடு, வசதி, சொத்து, நகை யோசிக்காமல் வாரி வழங்குகின்றனர். கொடுத்த பின்னர் திரும்ப பெற வழியில்லை.
வசனம் 20, அபாண்டமாகவும், பகிரங்க பாவமாகவும் திரும்ப வாபஸ் பெறக்கூடாது.
தனிமையில் மனைவியிடம் உறவு கொள்கிறீர் தியாகத்துடன் தங்களையே பரிசாகத் தருகிறார் மனைவி. சிறிய அற்ப விஷயம் பணம், நகை, சொத்து, வீடு. மனைவியின் தியாகத்துக்கு முன் சொத்து மிக அற்பம். தகராறு வந்தவுடன் கொடுத்தவைகளை மீண்டும் மனைவியிடம் கேட்டு வற்புறுத்தக் கூடாது.
வசனம் 22, தந்தை மணமுடித்த பெண்ணை விவாகம் செய்து கொள்ளாதீர். இது மானக்கேடு. வெறுப்புக்குரியது. தீய வழி.
-மௌலானா ரிஜ்வான் பாஷா காதிரி,
தமிழில்: பொறியாளர் ஆ.ர. இபுராஹிம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக